
59
சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டதைத்
தொடர்ந்து, சீனாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் (e-commerce) நிறுவனமான அலிபாபா,
இந்தியாவில் UC Browser, UC Newsகளை ஆகியவற்றின் செயல்பாடுகளை நிறுத்திவிட்டது.
அலிபாபா
நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த முடிவு அறிவிக்கப்பட்டு, உடனடியாக
டெல்லி என்.சி.ஆரின் குருகிராம் மற்றும் மும்பையில் உள்ள அலுவலகங்கள் மூடப்பட்டன.
UC
Browser, UC News நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று அலிபாபா
தெரிவித்துள்ளது.
கூகுளுக்கு
பிறகு இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் இரண்டாவது Browser அலிபாபாவின் தயாரிப்பான யு.சி. உலாவி (UC Browser)
என்பது குறிப்பிடத்தக்கது. Jack Maவுக்கு சொந்தமான அலிபாபா, உலகின்
மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றாகும்,
கடந்த
மாதம் 29ஆம் தேதியன்று, UC Browser, UC News, WeChat, TikTok, ShareIt உள்ளிட்ட 59
சீன மொபைல் செயலிகளை மத்திய அரசு தடை செய்தது.
"இந்த
செயலிகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு,
பாதுகாப்பு, மற்றும் பொது ஒழுங்குக்கு ஊறு விளைவிக்கின்றன" என்று இந்திய அரசு
செயலிகளை தடை செய்வதற்கான காரணத்தைக் கூறியது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் (Android and iOS)
இயங்குதளங்களில் கிடைக்கக்கூடிய சில மொபைல் appகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக
பல்வேறு தரப்பினரும் புகார்களை கொடுத்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக