இந்தியாவின்
ரிலையன்ஸ் அமேசான், வால்மார்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரிய
சவாலாக வளர்ந்து வருகிறது.
20 பில்லியன் டாலர் நிதி
முதலீட்டை ஈர்க்கும் ரிலயன்ஸின் திட்டம், டிஜிட்டல் உலகில் ஆதிக்கம் செலுத்த
வேண்டும் என்ற அதன் கனவை நிறைவேற்றலாம். அதோடு அமெரிக்க நிறுவனங்களான
அமேசான், வால்மார்ட் மற்றும் ஜூம் போன்றவற்றில் லட்சிய திட்டங்களுக்கு ஒரு சவாலாக
உருவெடுக்கலாம்.
ரிலையன்ஸ்
டிஜிட்டல் யூனிட் ஜியோ நிறுவனத்தில், பங்குகளை வாங்க
தனியார் நிறுவனங்கள் மட்டுமல்ல, கூகிள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களையும்
ஈர்த்துள்ளது, ரிலயன்ஸ் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எண்ணெய்
சுத்திகரிப்பு துறையில் கவனம் செலுத்தி வந்தது.
ரிலையன்ஸ்
நிறுவனம் போட்டி நிறுவனங்களை எளிதாக தவிடு பொடியாக்கும் திறனை
கொண்டது. இதில் ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு சாதனை படைத்துள்ளது. விலை குறைந்த
ஸ்மார்ட்போன்கள் மற்றும் அதிரடியான சலுகை திட்டங்கள் மூலம், தொலைத் தொடர்பு
நிறுவனமான Jio நான்கு ஆண்டுகளில் தொலை தொடர்பு துறையில் வலுவாக கால்
பதித்திருந்த வோடஃபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களுக்கு பெரும்
பாதிப்பை ஏற்படுத்தியது.
புதன்கிழமை,
ரிலயன்ஸ் நிறுவன தலைவரான முகேஷ் அம்பானி, சிறிய
சில்லறை விற்பனையாளர்களை நுகர்வோருடன் இணைக்கும், ரிலையன்ஸ் ஈ-காமர்ஸ்
(e-commerce) தளமான ஜியோமார்ட், மளிகை பொருட்களை மட்டுமல்ல, மின்னணு
மற்றும் பேஷன் பொருட்களையும் விற்பனை செய்யும் என்று கூறினார்.
ஜியோ நிறுவனங்களுக்கு வலுவான உள்கட்டமைப்பு
மற்றும் மேம்பாட்டு திறன்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல், தன்னை
விரிபடுத்திக் கொள்ள ஏதுவாக அதிக அளவிலான நுகர்வோரை ஈர்க்கும் திறன் பெற்றது என
என்று சிங்கப்பூரைச் சேர்ந்த நிதி ஆலோசனை நிறுவனமான Resfeber இன்டர்நேஷனலின்
மயங்க் விஷ்னோய் கூறினார்.
புதன்கிழமை,
ரிலயன்ஸ் நிறுவன தலைவரான முகேஷ் அம்பானி, சிறிய சில்லறை விற்பனையாளர்களை
நுகர்வோருடன் இணைக்கும், ரிலையன்ஸ் ஈ-காமர்ஸ் (e-commerce) தளமான
ஜியோமார்ட், மளிகை பொருட்களை மட்டுமல்ல, மின்னணு மற்றும் பேஷன்
பொருட்களையும் விற்பனை செய்யும் என்று கூறினார்.
ஜியோ
நிறுவனங்களுக்கு வலுவான உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு திறன்கள்
இருப்பதோடு மட்டுமல்லாமல், தனனி விரிபடுத்திக் கொள்ள ஏதுவாக அதிக அளவிலான
நுகர்வோரை ஈர்க்கும் திறன் பெற்றது என என்று சிங்கப்பூரைச் சேர்ந்த நிதி ஆலோசனை
நிறுவனமான Resfeber இன்டர்நேஷனலின் மாயங்க் விஷ்னோய் கூறினார்.
பேஸ்புக்
மற்றும் கூகிள் போன்ற இணைய தள நிறுவனக்களுடன் ரிலையன்ஸ் கூட்டு
வைத்திருப்பதால், ரிலயன்ஸ் நிறுவனம் இந்த சாதனையை எளிதாக படைத்து
விடும் என அவர் மேலும் கூறினார். .
இந்தியாவில்
40 கோடிக்கும் அதிகமான பயனர்கள் கொண்ட பேஸ்புக் Facebook மற்றும்
வாட்ஸ்அப் (WhatApp), சிறிய சில்லறை விற்பனையாளர்களை ஜியோமார்ட்டுடன் இணைப்பதில்
சிறப்பாக செயல்படும்.
"நாங்கள்
இன்னும் பல நகரங்களை உள்ளடக்குவோம், இந்தியா முழுவதும் பல வாடிக்கையாளர்களுக்கு
சேவை வழங்குவோம், மேலும் பல வகைகளுக்கு விரிவுபடுத்துவோம்" என்று அம்பானி
கூறினார்.
“அமேசான்
மற்றும் வால்மார்ட் போன்ற அமெரிக்க நிறுவனக்களுக்கு, ரிலயன்ஸ் நிச்சயம் ஒரு சவாலாக
இருக்கும் எனவும் இரு நிறுவனங்களும் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் என்று,
அமெரிக்க வர்த்தக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஜியோமார்ட்
தற்போது 200 நகரங்களில் மட்டுமே மளிகை பொருட்களை வழங்குகிறது, அதே நேரத்தில்
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நாடு முழுவதும் பரவலாக பல இடங்களுக்கு பொருட்களை
வழங்குகின்றன.
வால்மார்ட்,
பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இது தொடர்பாக உடனடியாக எதுவும் கூறவில்லை.
ரிலையன்ஸ்
6,700 நகரங்களில் சுமார் 11,000 கடைகளுடன் பரந்து விரிந்துள்ளதோடு, அவை பலவிதமான
தயாரிப்புகளை வழங்குகின்றன. இது Tiffany & Co, Burberry மற்றும் Jimmy
Choo உள்ளிட்ட 45 க்கும் மேற்பட்ட சிறந்த சர்வதேச பிராண்டுகளுடன் கூட்டு
வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும்
ரிலையன்ஸ் டிஜிட்டல் திட்டங்கள் ஈ-காமர்ஸுக்கும் அப்பாற்பட்டவை. புதன்கிழமை,
நிறுவனம் தனது ஜியோமீட் வீடியோ கான்பரன்சிங் கருவி மூலம் இணையம் மூலம் கல்வி
மற்றும் சுகாதார சேவை வழங்க சிறந்த தீர்வுகளை கொண்டு வரும் என்று
கூறியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக