நோக்கியா
மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் புதிய 65-இன்ச் 4கே யுஎச்டி
ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்
டிவி மாடல் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
இப்போது அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 65-இன்ச் 4கே யுஎச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு
டிவி மாடல் ஆனது வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி பிளிப்கார்ட் வலைதளம் மூலம் விற்பனைக்கு
வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு
சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தவகவல்களைப் பார்ப்போம்.
புதிய நோக்கியா 65-இன்ச் 4கே யுஎச்டி ஸ்மார்ட் டிவி ஆனது 2840 x 2160 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி 178 டிகிரி கோணம் ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 480nits பிரைட்நஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த
65-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவியில் டால்பி விஷனும் இடம்பெறுகிறது, இது பார்வை
அனுபவத்தை மேம்படுத்த உதவுகிறது.குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக
கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
65-இன்ச்
நோக்கியா ஸ்மார்ட் டிவியில் 1ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர்
வசதியுடன் மாலி 450எம்பி4 ஜிபியு ஆதரவும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு டிவி 9.0பை
இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக
இருக்கும்.
இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவியில் 2.25ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு இது கூகிள் பிளே ஸ்டோருடன் உள்ளமைக்கப்பட்ட Chromecast ஆதரவு, கூகிள் அசிஸ்டென்ட் மற்றும் பல ஆதரவுகளுடன் வருகிறது.
65-இன்ச்
நோக்கியா ஸ்மார்ட் டிவியின் ஆடியோ பற்றி பேசுகையில்,24வாட் ஸ்பீக்கர் இவற்றுள்
பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் டி.டி.எஸ் ட்ரூசரவுண்ட், டால்பி ஆடியோ ஆதரவும்
இவற்றுள் அடக்கம். பின்பு ஜேபிஎல் ஸ்பீக்கர் வசதி இவற்றுள் இருப்பதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
வைஃபை
802.11, புளூடூத் 5.0, 3 எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட், யுஎஸ்பி 3.0
போர்ட், ஈதர்நெட் போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த
சாதனம். மேலும் நோக்கியா 65-இன்ச் 4கே யுஎச்டி ஸ்மார்ட் டிவியின் விலை
ரூ.64,999-ஆக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக