டெக்னோ
நிறுவனம் மிகவும் எதிர்பார்த்த டெக்னோ ஸ்பார்க் 6ஏர் ஸ்மார்ட்போன் மாடலை
இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும்
ஆகஸ்ட் 6-ம் தேதி ஆப்லைன் தளங்களில் விற்பனைக்கு வரும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் மற்றும்
விலை உள்ளிட்ட தகவல்களைப் பார்ப்போம்.
டெக்னோ
ஸ்பார்க் 6ஏர் ஸ்மார்ட்போன் மாடல் 7-இன்ச் எச்டி பிளஸ் டாட் நாட்ச் டிஸ்பிளே
வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 90% screen-to-body ratio மற்றும் சிறந்த
பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
இந்த
ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஏ22 எஸ்ஒசி சிப்செட் வசதி
இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன்
வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குறிப்பாக
இந்த டெக்னோ ஸ்பார்க் 6ஏர் ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க
மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த
ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெக்னோ
ஸ்பார்க் 6ஏர் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த்
சென்சார் + ஏஐ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும்
8எம்பி ஏஐ செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள்
அடக்கம்.
இந்த
டெக்னோ ஸ்பார்க் 6ஏர் ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,
எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது,மேலும் இந்த சாதனத்தில் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
உள்ளிட்ட பல்வேறு ஆதவுகள் இடம்பெற்றுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைஃபை,
ஜிபிஎஸ், புளூடூத், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக்
உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 6ஏர்
ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாhதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது
அந்நிறுவனம்.
டெக்னோ
ஸ்பார்க் 6ஏர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.7999-ஆக உள்ளது. மேலும் வரும் ஆகஸ்ட் 6-ம்
தேதி இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக