கூகிள் நிறுவனம் கூகிள் பிளே
ஸ்டோரிலிருந்து பாதிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு மால்வேர் பயன்பாடுகளை அகற்றுவதில்
தீவிரமாக உள்ளது. தற்பொழுது கூகிள் நிறுவனம் 29 மால்வேர் ஆப்ஸ்களை பிளே ஸ்டோரில்
கண்டறிந்துள்ளது. அவற்றை உடனடியாக டெலீட் செய்யும்படி வலியுறுத்தியுள்ளது.
அகற்றப்பட 29 ஆப்ஸ்களின் பெயர்கள் மற்றும் கரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆட்வேர் (adware) கொண்ட 29
பயன்பாடுகள்
இந்தியாவில் அரசாங்கத்தின் உத்தரவு
காரணமாக இதில் சில பயன்பாடுகள் அகற்றப்பட்டாலும், மற்றவை கூகிளின்
வழிகாட்டுதல்களைச் சரியாகப் பின்பற்றி பூர்த்தி செய்யத் தவறியதால் உலகளவில்
தற்பொழுது தடை செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய அறிக்கையின்படி, ஆண்ட்ராய்டு ஆப்
ஸ்டோரிலிருந்து ஆட்வேர் (adware) கொண்ட 29 பயன்பாடுகள் கூகிள் நிறுவனம் அதிரடியாக
நீக்கம் செய்துள்ளது.
புகைப்பட எடிட்டிங் பயன்பாடுகளில்
மால்வேர்
ஆட்வேர் கொண்டு செல்லும் இந்த
பயன்பாடுகளை ஒயிட் ஓப்ஸின் சடோரி அச்சுறுத்தல் புலனாய்வுக் குழு கண்டறிந்தது. இது
பாதுகாப்பு நிறுவனத்தின் "CHARTREUSEBLUR" விசாரணையின் ஒரு பகுதியாகும்.
இந்த பயன்பாடுகளில் பெரும்பாலானவை புகைப்பட எடிட்டிங் பயன்பாடுகளாக இருந்துள்ளது,
இந்த பயன்பாடுகள் பயனர்கள் தங்களின் புகைப்படங்களின் பின்னணியை இலவசமாக
ப்ளர்(blur) செய்ய அனுமதிக்கிறது
ஒருமுறை இன்ஸ்டால் செய்தால்
அன்இன்ஸ்டால் செய்ய முடிவதில்லை
இதுவரை, இந்த பயன்பாடுகள் அவுட் ஆஃப்
கான்டெக்ஸ்ட் (OOC) விளம்பரங்கள் காரணமாக ரேடரின் கீழ் சென்றுள்ளன. இது தவிர, இந்த
ஆப்ஸ்களை பயனர் தனது ஸ்மார்ட்போனில் நிறுவியவுடன் இந்த பயன்பாடுகள் வழக்கமாகப்
பயன்பாட்டு டிராயரில் இருந்து மறைந்துவிடுகிறது. இதன் விளைவாக, பயனர்கள்
பயன்பாட்டைக் கண்டுபிடித்து அதை தங்கள் ஸ்மார்ட்போன்களிலிருந்து நீக்கம் செய்ய
முடிவதில்லை என்பது தெரியவந்துள்ளது.
அன்இன்ஸ்டால் செய்ய ஒரே வழி இதுதான்
இருப்பினும், அன்இன்ஸ்டால் செய்ய ஒரு
வழி இருக்கிறது. போனில் உள்ள ஆப் மேனேஜர் பக்கத்தின் வழியாகப் பயன்பாட்டு
இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள பகுதிக்குச் செல்வதற்கான ஒரு சிறிய முயற்சி பயனர்கள்
மேற்கொள்ள வேண்டும், அதன்படி இன்ஸ்டால் செய்யப்பட்ட இந்த மால்வேர் பயன்பாடுகளை
நீங்கள் அன்இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். கூடுதலாக, பயன்பாட்டைக் கண்டுபிடித்து
அன்இன்ஸ்டால் செய்யப் பயனர்கள் பிளே ஸ்டோருக்குச் செல்லலாம்.
பாதிக்கப்பட்ட 29 ஆப்ஸ்களின் பட்டியல்
- ஆட்டோ பிக்சர் கட் (Auto Picture Cut)
- கலர் கால் ஃப்ளாஷ் (Color Call Flash)
- ஸ்கொயர் போட்டோ ப்ளர் (Square Photo Blur)
- ஸ்கொயர் ப்ளர் போட்டோ (Square Blur Photo)
- மேஜிக் கால் ஃப்ளாஷ் (Magic Call Flash)
- ஈஸி ப்ளர் (Easy Blur)
- இமேஜ் ப்ளர் (Image Blur)
- ஆட்டோ போட்டோ ப்ளர் (Auto Photo Blur)
- போட்டோ ப்ளர் (Photo Blur)
- போட்டோ ப்ளர் மாஸ்டர் (Photo Blur Master)
- சூப்பர் கால் ஸ்கிரீன் (Super Call Screen)
- ஸ்கொயர் ப்ளர் (Square Blur)
- ஸ்கொயர் ப்ளர் மாஸ்டர் (Square Blur Master)
- ஸ்மார்ட் ப்ளர் போட்டோ (Smart Blur Photo)
- ஸ்மார்ட் போட்டோ ப்ளர் (Smart Photo Blur)
- சூப்பர் கால் ஃப்ளாஷ் (Super Call Flash)
- ஸ்மார்ட் கால் ஃப்ளாஷ் (Smart Call Flash)
- ப்ளர் போட்டோ எடிட்டர் (Blur Photo Editor)
- ப்ளர் இமேஜ் (Blur Image)
உடனடியாக அன்இன்ஸ்டால்
செய்துவிடுங்கள்
இந்த பயன்பாடுகளில் ஒரே பெயரில்
பதிவுசெய்யப்பட்ட வெவ்வேறு பதிப்புகள் கூகிள் பிளே ஸ்டோரில் இருந்துள்ளது, இது
மொத்த பயன்பாடுகளின் எண்ணிக்கையை 29 ஆகக் அதிகரித்துள்ளது என்று கூகிள் நிறுவனம்
தெரிவித்துள்ளது. பயனர்களுக்குப் பாதுகாப்பில்லாத இந்த 29 பயன்பாடுகளில் ஏதேனும்
உங்கள் போனில் இருந்தால் உடனடியாக அவற்றை அன்இன்ஸ்டால் செய்துவிடுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக