ரியல்மி
நிறுவனம் தனது புதிய ரியல்மி 6i ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் இன்று
அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் மிரட்டலான
அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை விபரம், சிறப்பம்சம் மற்றும்
எப்பொழுது இது விற்பனைக்கு கிடைக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
ரியல்மி
நிறுவனம் தனது 6 சீரிஸில் வரிசையில் மூன்றாவது ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம்
செய்துள்ளது. இந்தியாவில் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ரியல்மி
6i ஸ்மார்ட்போன், ரியல்மி 6 போனுடன் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது மற்றும் அதே
6.5' இன்ச் டிஸ்ப்ளே, 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, 4300 எம்ஏஎச் பேட்டரி மற்றும்
மீடியாடெக் ஹீலியோ ஜி 90 டி சிப்செட் கொண்டுள்ளது.
இருப்பினும் இந்த புதிய ஸ்மார்ட்போனில் கவனிக்கத்தக்க தாகத் தோன்றும் ஒரே வித்தியாசம் கேமரா பயன்பாடு மற்றும் இதன் விலை அம்சம் தான். புதிய ரியல்மி 6i கேமராவில் 4K வீடியோ ஆதரவு, ஸ்லோ-மோஷன் வீடியோ, எச்டிஆர் பயன்முறை, போட்ரைட் மோடு, சூப்பர் நைட்ஸ்கேப் 2.0, டைம்-லேப்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. 30W ஃப்ளாஷ் சார்ஜிங் முறைப்படி 55 நிமிடங்களில் சாதனம் முழுமையாக 100 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும்.
புதிய
ரியல்மி 6i விவரக்குறிப்புகள்
- 6.5' இன்ச் எச்டி பிளஸ் உடன் கூடிய 90 ஹெர்ட்ஸ் மற்றும் 1600x720 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பாதுகாப்பு
- மீடியாடெக் ஹீலியோ ஜி 90 டி சிப்செட்
- 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு
- மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ்
- ரியல்மி UI அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம
- 48 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
- 8 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா
- 2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ்
- 2 மெகாபிக்சல் கொண்ட டெப்த் சென்சார்
- 16 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா
- 30W ஃப்ளாஷ் சார்ஜிங்
- எஃப்எம் ரேடியோ
- கைரேகை ஸ்கேனர்
- 3.5 மிமீ ஆடியோ ஜாக்
- டூயல் நானோ சிம் வசதி (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
- டூயல் 4 ஜி வோல்டிஇ
- ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், குளோனாஸ்
- புளூடூத் 5.0
- 4300 எம்ஏஎச் பேட்டரி
இந்தியாவில்
ரியல்மே 6i விலை
ரியல்மி
6i ஸ்மார்ட்போனி 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் இந்திய சந்தையில் ரூ
.12,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இதன் டாப்-எண்ட்
வேரியண்ட் மாடலான 6 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ .14,999 என்ற விலையில்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் மற்றும் நாட்டின்
ஆஃப்லைன் கடைகள் வழியாக வாங்க கிடைக்கிறது. முதல் விற்பனை ஜூலை 31 அன்று மதியம் 12
மணிக்கு ஆன்லைனில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக