இடுப்புவலிக்கு
முற்றுப்புள்ளி வைக்கும் கருப்பு உளுந்தங்களி.
இன்று
வளர்ந்துள்ள நாகரிகம், நமது பாரம்பரியங்கள் கலாச்சாரங்கள் என அனைத்தையுமே
அழித்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், நம் நமது பாரம்பரிய
உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளின் மீது ஏற்பட்டுள்ள மோகம், பல நோய்களுக்கு
நம்மை அடிமையாக்கியுள்ளது.
தற்போது
இந்த பதிவில் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான, கருப்பு உளுந்தங்களியில் உள்ள நன்மைகள்
பற்றி பார்ப்போம்.
இன்றும்
சில கிராமப்புறங்களில் உளுந்தப் பணியாரம், அத்திகா பணியாரம், உளுந்துப்பொடி,
உளுந்தங்களி போன்ற ஏராளமான சுவைமிக்க உணவுகளை செய்கின்றனர்.
இடுப்பு
எலும்பு
இன்று
மிக சிறிய வயதிலேயே, பலருக்கும் இடுப்பு வலி வந்துவிடுகிறது. இதற்கு காரணம் நமது
உடலில் சத்து இல்லாததது தான். இடுப்பு எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் போக்க,
அடிக்கடி இந்த உளுந்தங்களியை சாப்பிட்டு வந்தால், எலும்பு பலப்பட்டு, நமது
ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
கர்ப்பப்பை
இன்று
பெண்கள் அதிகமாக தாக்குகின்ற பிரச்சனியாக்களில் ஒன்று, கர்ப்பப்பை பிரச்னை. இந்த
பிரச்சனைகளை போக்க நாம் பல வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டாலும், இந்த
பிரச்சனைகளில் போக்குவதில் கருப்பு உளுந்தங்களி மிக முக்கியமான பங்கினை
வகிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக