Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 13 ஜூலை, 2020

Apple iPhone 12: புதிய மாடலின் விலை மற்றும் பிற விவரங்கள்!!

Apple iPhone 12: புதிய மாடலின் விலை மற்றும் பிற விவரங்கள்!!
புதிய ஐ-போனுக்காக (iPhone) காத்திருக்கிறோம். ஆப்பிள் ஐ-போன் 12 (Apple iphone12) மற்றும் ஆப்பிள் ஐ-போன் 12 ப்ரோ (Apple iphone12 Pro)  ஆகியவை சில மாதங்களில் சந்தையில் வரவுள்ளன.  ஐபோன் 12 இன் அடிப்படை மாடலின் விலை (Price Details) பற்றி தெரிய வந்துள்ளது. புதிய நுழைவு நிலை ஐபோன் 12 இன் விலை பழைய ஜெனரேஷன் மாடலை விட $ 50 அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
அறிக்கையின்படி, ஐபோன் 12 இன் அடிப்படை மாடலின் (Base Model) விலை 749 டாலர் அதாவது சுமார் 54,800 ரூபாய் வரை இருக்கலாம் எனத் தெரிகிறது. நிறுவனம் இந்த தொலைபேசியை 5.4 இன்ச் OLD டிஸ்ப்ளே, A 14 சிப்செட், 5 ஜி இணைப்பு மற்றும் இரட்டை கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யும்.
இந்த தொடரின் கீழ் ஆப்பிள் நான்கு மாடல்களை அறிமுகம் செய்யும். இதில் ஐபோன் 12, ஐபோன் 12 மேக்ஸ் (iphone12 Max), ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 புரோ மேக்ஸ் (iphone12 Pro Max) ஆகியவை அடங்கும். இந்த மாடல்கள் 5.4 இன்ச், 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் ஆகிய அளவுகளில்  இருக்கும். இரட்டை கேமரா அமைப்பு ஐபோன் 12, ஐபோன் 12 மேக்ஸில்  கொடுக்கப்படலாம். ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றை மூன்று கேமரா அமைப்புடன் நிறுவனம் லாஞ்ச் செய்யலாம்.
ஐபோன் 12 இல் 5.4 அங்குல ஸ்க்ரீன் கொடுக்கப்படலாம். அதே நேரத்தில், ஐபோன் 12 புரோ மற்றும் ஐபோன் 12 மேக்ஸ் ஆகியவற்றில் 6.1 இன்ச் டிஸ்ப்ளே இருக்கக்கூடும். அதேசமயம், ஐபோன் 12 புரோ மேக்ஸில் 6.7 அங்குல ஸ்க்ரீன்  கொடுக்கப்படலாம். அனைத்து மாடல்களின் முன்பக்க பேனலிலும் நான்கு துளைகளைக் காண முடியும். இதில் செல்பி கேமரா, ஃபேஸ் அன்லாக் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், லைட் சென்சார் போன்றவை வழங்கப்பட்டிருக்கும். இந்த தொடரை iOS 14 ஆபரேடிங் சிஸ்டத்துடன் நிறுவனம் கொண்டு வரலாம். மேலும், இணைய மேம்பாடுகள் உட்பட பல முக்கிய மேம்பாடுகளை இதில் நாம் காணக்கூடும்.
ஐபோன் 12 இல் 5.4 இன்ச் OLD சூப்பர் ரெடினா டிஸ்ப்ளே உள்ளது. இதற்கு 5 ஜி தொழில்நுட்ப ஆதரவுடன் வெவ்வேறு சேமிப்பு திறன் வழங்கப்பட்டுள்ளது. 4 GB RAM கொண்ட சேமிப்பு திறனின் இரண்டு வர்ஷன்களில் இந்த போன் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக