கேரளாவின்
ஸ்ரீ பத்மநாபசாமி கோயிலின் நிர்வாகத்தில் திருவிதாங்கூர் அரச
குடும்பத்திற்கு உரிமை உண்டு என, உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை அன்று தீர்ப்பை
வழங்கியுள்ளது.
திருவனந்தபுரம்
மாவட்ட நீதிபதி தலைமையிலான குழு, இப்போது கோயிலில் மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகள்
குறித்து ஆராயும் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
கேரளாவில்
உள்ள ஸ்ரீ பத்மநாபசாமி கோவிலின் நிர்வாகத்தில் திருவிதாங்கூர் அரசு
குடும்பத்திற்கு அதிகாரம் உண்டு என அங்கீகரித்துள்ளது.
We wholeheartedly welcome Supreme Court verdict on Sree
Padmanabhaswamy Temple. It re-establishes our family's connection with Lord
Sree Padmanabha. The family is happy about it. We're looking forward to reading
the full verdict:Adithya Varma,Travancore royal family member to ANI https://t.co/suciUDeVvD
—
ANI (@ANI) July 13, 2020
கோயிலுக்கான
முக்கிய குழு அமைக்கப்படும் வரை தற்போது உள்ள நடைமுறை தொடரும் என்றும், இந்த
குழுவை அமைப்பதில், அரச குடும்பத்திற்கு முக்கிய பங்கு இருக்கும். எனினும்,
வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோயிலின் பெட்டகத்தை திறப்பது குறித்து உச்ச
நீதிமன்றம் எதுவும் கூறவில்லை.
பல
நூற்றாண்டு பழமையான இந்த பத்பநாப சுவாமி கோவிலில் உள்ள கோயிலின் நான்கு பாதாள
அறைகளில் தங்க ஆபரணங்கள், நகைகள் மற்றும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள
விலைமதிப்பற்ற கற்கள் உள்ளன என்ற தகவல் 2011 ஆம் ஆண்டு வெளிவந்ததை அடுத்து,
அது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.
ஸ்ரீ
பத்மநாபசுவாமி கோயிலின் நிர்வாகத்தில் உள்ள முறைகேடுகள் தொடர்பான வழக்கு, 2011
முதல் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
வரலாற்று
சிறப்பு மிக்க இந்த கோயில், 18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரச
குடும்பத்தினரால், மீண்டும் கட்டப்பட்டது. 1947 ஆம் ஆண்டில் இந்திய ஒன்றியத்துடன்
ஒருங்கிணைப்பதற்கு முன்னர் திருவிதாங்கூர் அரச குடும்பம்,தெற்கு கேரளாவின் சில
பகுதிகளையும் தமிழ்நாட்டின் சில பகுதிகளையும் ஆட்சி செய்தது வந்தது என்பது
குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக