>>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 13 ஜூலை, 2020

    கைதி 2 ரெடி.. அப்ப ரஜினி படம் என்னாச்சு?

    கார்த்தி நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற படம் கைதி.
    மாநகரம், கைதி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை எடுத்து முடித்து ரிலிஸ்க்கு தயாராக உள்ளது. கொரோனா ஊரடங்கு போன்றவை முடிந்த பிறகு திரை அரங்குகள் திறக்கும் போது முதல் படமாக மாஸ்டர் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.
    மறுபக்கம், லோகேஸ்ஜ் கனகராஜ் ரஜினிக்கு கதை கூறியதாகவும், ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது. இதற்கிடையில் கொரோனா ஊரடங்கால், திரைப்பட ஷூட்டிங் அனைத்தும் நடைபெற்றுள்ளது. அதில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த அண்ணாத்த படமும் அடங்கும்.
    அண்ணாத்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் திரைப்படம் முடிந்துள்ளதால் லோகேஷ் கனகராஜ் ஃப்ரீ. ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு வர கால தாமதமாகும்.
    எனவே கார்த்தி – லோகேஷ் கனகராஜ் இருவரும் கைதி 2 படம் குறித்து விவாதித்து முடிவெடுத்துள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
    அது மட்டுமல்லாமல் சூர்யாவை வைத்து இரும்புக் கை மாயாவி படத்தை லோகேஷ் கனகராஜ்  இயக்குவார். 2018-ம் ஆண்டு முதல் பல்வேறு காரணங்களால் இந்த திரைப்படம் அறிவிப்பும் தள்ளிப்போய்கொண்டு இருக்கிறது என்று கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் சிவகுமார் குடும்பத்திலிருந்து ஒருவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.
    ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு டிசம்பர் மாதம் வந்தாலும், அதற்குள் லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தை முடித்துவிட்டு வந்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக