பரிதாப நிலையில் ஜீ எண்டர்டெய்ன்மெண்ட்... பங்குகளை என்ன செய்வது?
புதிய பொடியன்
சனி, ஜூலை 25, 2020
ஜீ எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தனது ஜனவரி-மார்ச் காலாண்டுக்கான விவரங்களை
இன்று வெளியிட்டுள்ளது. அதில், மார்ச் காலாண்டில் மொத்தம் ரூ.765.82 கோடி நிகர
இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டு ஜனவரி-மார்ச் காலாண்டில் ஜீ எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் ரூ.292.53
கோடி நிகர லாபத்தை ஈட்டியது. ஆனால் இந்த ஆண்டு கணிசமான இழப்பை சந்தித்துள்ளது.
கடந்த மார்ச் காலாண்டில் ஜீ எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம்
4.06% சரிந்து ரூ.1,991.74 கோடியாக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டிலோ ரூ.2,076.06
கோடி வருமானத்தை ஈட்டியது.
கடந்த மார்ச் காலாண்டில் ஜீ எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் தொழில் செலவுகள்
47.69 விழுக்காடு அதிகரித்து ரூ.1,304.62 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், முந்தைய
ஆண்டிலோ ரூ.883.32 கோடி மட்டுமே செலவாகியுள்ளது.
மார்ச் காலாண்டில் ஒட்டுமொத்த செலவுகள் 66.05 விழுக்காடு அதிகரித்து ரூ.2,677.77
கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டிலோ ரூ.1,612.60 கோடி மட்டுமே செலவாகியுள்ளது.
விளம்பரங்கள் வாயிலான வருவாய் மார்ச் காலாண்டில் 14.66 விழுக்காடு அதிகரித்து
ரூ.1,038.94 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டில் ரூ.1,217.49 கோடி விளம்பர
வருவாய் கிடைத்தது.
நாட்டின் பொருளாதார சூழல் சரியில்லாததாலும், சந்தைப் பங்கு இழப்பாலும் மார்ச்
காலாண்டில் சரிவு ஏற்பட்டுள்ளதாக ஜீ எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜீ எண்டர்டெய்ன்மெண்ட் பங்கு விலை நேற்று 4.84% சரிந்து ரூ.151.25ஆக
குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே இந்நிறுவனத்தின் பங்கு விலை சரிந்துகொண்டே
வருகிறது. தற்போது மார்ச் காலாண்டில் இழப்பு ஏற்பட்டுள்ளதால் பங்கு விலை மேலும்
சரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக