Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 25 ஜூலை, 2020

Tata Sky பயனர்களுக்கு இனிமேல் இது எக்ஸ்ட்ரா! டேட்டா வேகம் பற்றி இனி கவலை வேண்டாம்!

டாடா ஸ்கை
டாடா ஸ்கை நிறுவனம் தனது பிராட்பேண்ட் பயனர்களுக்காக ஒரு அற்புதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டாடா ஸ்கை நிறுவனம் அதன் அனைத்து வரம்பற்ற திட்டங்களின் FUP வேகத்தை தற்பொழுது அதிகரித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பின் படி பயனர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.
டாடா ஸ்கை நிறுவனம் அதன் அனைத்து பிராட்பேண்ட் திட்டங்களுக்குமான FUP லிமிட் வேகத்தை தற்பொழுது அதிகரித்துள்ளது. FUP லிமிட் வேகம் என்பது குறிப்பிட்ட திட்டத்தின் டேட்டா வரம்பு முடிந்த பின்னர் பயனர்கள் பெறும் டேட்டாவின் வேகத்தைக் குறிக்கிறது. இப்பொழுது இந்த டேட்டா வேகம் தான் அனைவருக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
டாடா ஸ்கை நிறுவனம் தனது வரம்பற்ற பிராட்பேண்ட் திட்டங்களுக்கு மட்டும் இந்த புதிய மாற்றத்தை அப்டேட் செய்துள்ளது. டாடா ஸ்கை நிறுவனத்தின் இந்த புதிய அறிவிப்புப் படி, டாடா ஸ்கை பிராட்பேண்ட் பயனர்கள் இனி 3Mbps என்கிற FUP வேகத்துடன் டேட்டா சேவையைப் பயன்படுத்த முடியும். முன்னதாக, டாடா ஸ்கை பயனர்களுக்கு 2Mbps என்கிற FUP வேகம் தான் வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டாடா ஸ்கை நிறுவனம் ரூ.950 திட்டத்தின் கீழ் 25 எம்.பி.பி.எஸ் வேகத்தை வழங்குகிறது, ரூ. 1050 திட்டத்தின் கீழ் 50 எம்.பி.பி.எஸ் வேகத்தை வழங்குகிறது, ரூ.1150 திட்டத்தின் கீழ் 100 எம்.பி.பி.எஸ் வேகத்தை வழங்குகிறது மற்றும் ரூ.1150 திட்டத்தின் கீழ் 300 எம்.பி.பி.எஸ் வேகத்தை வழங்குகிறது. இதுபோன்ற பல்வேறு வரம்பற்ற பிராட்பேண்ட் திட்டங்களை டாடா ஸ்கை தனது பட்டியலின் கீழ் கொண்டுள்ளது.
அதேபோல், டாடா ஸ்கை நிறுவனம் ZEE5 நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து தனது ஸ்ட்ரீமிங் சேவையான டாடா ஸ்கை பிங்கே+ மேடையில் ஆறு மாத பிரீமியம் ZEE5 உள்ளடக்கத்தை இலவசமாக வழங்குகிறது என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சந்தா பயன்பாட்டை இப்போது டாடா ஸ்கை பிங்கே+ பயனர்கள் முற்றிலும் இலவசமாக அணுகலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
டாடா ஸ்கை இந்தியாவில் ஸ்மார்ட் அல்லாத செட்-டாப் பாக்ஸ்களில் பிரபலமான உள்ளடக்கத்தைக் கண்டறிய புதிய பயனர் இடைமுகத்தில் புதிய ஸ்டாப் சொல்யூஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா ஸ்கை ரிமோட்டில் உள்ள மஞ்சள் பட்டனை அழுத்துவதன் மூலம் பயனர்களுக்குச் சிறந்த திரைப்படங்கள் மற்றும் லைவ் ஸ்போர்ட்ஸின் உள்ளடக்கத்தைக் காண முடியும். இந்த அம்சம் அனைத்து எச்டி மற்றும் எஸ்டி செட்-டாப் பாக்ஸ்களிலும் கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக