வரும் ஞாயிறு
முதல் மீண்டும் முழு ஊரடங்கு என போலி செய்தி பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே
சென்னை, மதுரை உள்பட 6 மாவட்டங்களில் சமீபத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது
என்பதும் அந்த முழு ஊரடங்கு முடிவடைந்து தற்போது நார்மலான ஊரடங்கு அமலில் இருக்கிறது
என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில்
ஒரு சில சமூக வலைத்தளங்களிலும் வாட்ஸ் அப் உள்ளிட்ட வலைதளங்களிலும் சென்னை கோவை
மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் முழு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த இருப்பதாக
போலி செய்திகள் வலம் வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தற்போது ஜூலை
31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சென்னை மதுரை
கோவை ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி கொண்டே வருகிறது என்பதால்
மீண்டும் இந்த மூன்று மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப் போவதாக சமூக
வலைதளங்களில் போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது
ஆனால் இது
முழுக்க முழுக்க வதந்தி என்றும், சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களிலும்
ஞாயிறு முதல் முழு ஊரடங்கு என்ற செய்தி முற்றிலும் பொய்யான செய்தி என்று விளக்கம்
அளிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக