Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 29 ஜூலை, 2020

வாட்ஸ் அப் மூலம் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு பிரசவம்: நண்பன் பாணியில் ஒரு சம்பவம்


வாட்ஸ் அப் மூலம் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு பிரசவம்
தளபதி விஜய் நடித்த நண்பன் திரைப்படத்தில் சத்யராஜ் மகளுக்கு வீடியோ கால் மூலம் சத்யராஜின் இளைய மகளிடம் ஆலோசனை கேட்டு விஜய் பிரசவம் பார்ப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் காட்சியை போன்று கர்நாடகாவில் நிஜமாகவே ஒரு பிரசவம் நடந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹவேரி என்ற பகுதியைச் சேர்ந்த வசந்தி என்பவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு கடந்த ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட தினத்தில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது

முழு ஊரடங்கு என்பதால் வசந்தியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. முழுக்க முழுக்க போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து மருத்துவர் பிரியங்கா என்பவரை தொடர்பு கொண்ட அந்த பகுதி மக்கள், வாட்ஸ்அப் மூலம் மருத்துவர் கூறிய அறிவுரைகளையும் பின்பற்றிப் பிரசவம் பார்த்தனர். இந்த பிரசவத்தில் வசந்திக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் குழந்தையும் நலமாக இருப்பதால் உள்ளுர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

நண்பன் திரைப்படம் போலவே வாட்ஸ்அப் வீடியோ மூலம் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு பிரசவம் பார்த்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக