Xiaomi நிறுவனம் நிச்சயமாக ஏராளமான
விமர்சகர்களைக் கொண்டுள்ளது, ஆனால் நிறுவனம் எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்களுக்கான
சில புதுமையான டிசைன்கள் மற்றும் அதற்கான காப்புரிமைகளுடன் வருவதை நீங்கள் யாரும்
எதிர்பார்த்திருக்க முடியாது. சியோமி தனது டிசைனில் பல வித்யாசமான அணுகுமுறைகளை
மேற்கொண்டு வருகிறது. அப்படியான ஒரு டிசைன் தான் இந்த புதிய ஸ்மார்ட்போன்.
ஜூன் மாதத்தில், ஐபோன்-எஸ்க்யூ
சியோமி ஸ்மார்ட்போனுக்கான காப்புரிமையைப் பற்றி நாங்கள் அறிக்கை செய்தோம், அது மேல்
வட்டத்தில் இரண்டு வட்ட அம்சங்களைக் கொண்டிருந்தது, இது பாப்-அப் கேமரா அமைப்பிற்காக
இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.அந்த சந்தேகத்திற்கான உண்மை விடை என்ன என்பது
இப்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் மேல் காணப்பட்ட வட்ட வடிவம் பாப்
அப் கேமரா இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
அப்படியானால், ஸ்மார்ட்போன் மேல்
பகுதில் உள்ள அந்த வட்ட வடிவம் எதற்கானது என்பது தானே நம்முடைய அடுத்த கேள்வியாக இருக்கும்.
நாம் யாரும் யூகித்து இருக்க முடியாத வகையில் சியோமி நிறுவனம் தனது புதிய டிசைனில்
தன் திறமையை காட்டியுள்ளது. மேல் பகுதியில் உள்ள வட்ட வடிவ அம்சங்கள் உண்மையில் வயர்லெஸ்
இயர்பட்ஸின் ஒரு பகுதியாகும், இந்த வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் சியோமி ஸ்மார்ட்போனுக்குள்
வைக்கப்பட்டுள்ளபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாத்தியமான ஷியோமி ஸ்மார்ட்போனில்
வயர்லெஸ் இயர்பட்ஸ் எவ்வாறு பொருந்தும் என்பதைக் காட்டும் சில சிறந்த ரெண்டர்களை LetsGoDigital
வழங்கியுள்ளது. இந்த ஆடியோ சாதனம் முழுவதுமாக அகற்றப்படும் படி டிசைன் செய்யப்பட்டுள்ளது
அல்லது இந்த பாகங்கள் எப்படியாவது ஸ்மார்ட்போனுடன் நேரடியாக இணைக்கப்பட்டு பின்னர்
ஸ்பீக்கர்களாகப் பயன்படுத்தப்படவும் வாய்ப்புள்ளது என்பது போன்று தெரிகிறது. அதேபோல்,
சாதனத்தின் டிஸ்பிளே கீழ் பகுதியில் செல்ஃபி கேமரா வருவதாகத் தெரிகிறது.
டிசைன்
விபரங்களில் சுட்டிக்காட்டப்பட்டபடி, இங்கே காட்டப்பட்டுள்ள இயர்பட்ஸ்கள் சியோமி
நிறுவனத்தின் மி ட்ரூ வயர்லெஸ் இயர்போன்களின் வடிவமைப்பிற்கு முற்றிலும் முரணானவை
அல்ல, ஆனால் பக்கவாட்டில் திரும்ப கூடிய ஹிஞ் கொண்ட இயர்பட்ஸ் வடிவத்துடன் காது
மற்றும் ஸ்மார்ட்போன் உள் சொருக ஏற்றபடி டிசைன் செய்யப்பட்டுள்ளது. இயர்பட்ஸ்
தொடர்ந்து காதுக்கும் பின்னர் போனிற்கும் மாற்றி செருகப்படுவதால் சுகாதார
பிரச்சினைகள் ஏற்படலாம் என்று கருத்துக்கூறப்பட்டுள்ளது.
சியோமி
தனது பிரபலமான மி மிக்ஸ் வரிசையில் இத்தகைய சாதனத்தை உற்பத்தியில் வைப்பதில்
ஆபத்தை ஏற்படுத்துமா என்பது விவாதத்திற்குரியது. நிச்சயமாக, இந்த இயர்பட்ஸ்களை ஸ்மார்ட்போனுடன்
வைத்திருக்க சியோமி ஹவுசிங்கிற்கு உள்ளே சிறிது இடத்தை உருவாக்க வேண்டும் என்பதில்
சந்தேகமில்லை. காப்புரிமையில் உள்ள ஸ்மார்ட்போன் மிகவும் பெரிய வடிவில் இருப்பது
போல் தோன்றுகிறது. எனவே சீன OEM ஏற்கனவே உள் ஏற்பாடு சிக்கலை கவனத்தில்
எடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக