ஸ்ரீ பெரும்புதூர் அருகே மகன் தாயின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ
பெரும்பதூர் அடுத்த கீவலூர் பகுதியில் வசிப்பவர் துரை (60). இவர் கூலி வேலை செய்து
வருகிறார். இவரது மனைவி கோவிந்தம்மாள் (58) மற்றும் மகன் ஆனந்தன் (33) உள்ளனர்.
ஆனந்தன் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
குடிக்கு அடிமையான ஆனந்தன் அவ்வப்போது மனைவியுடன் பிரச்சனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக கடந்த மாதம் ஆனந்தனின் மனைவி தன் தாய் வீட்டிற்கு சென்றதால் ஆனந்தன் மன உளைச்சலுக்கு உள்ளாகி பெற்றோர்களிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தந்தை துரை நேற்றிரவு வெளியில் சென்றிருந்த போது வீட்டில் தனியாக இருந்த கோவிந்தம்மாளின் கழுத்தை ஆட்டை அறுப்பது போல் அறுத்து ஆனந்தன் கொலை செய்தார்.
கோவிந்தமாளின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் கோவிந்தம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிபோதையில் ஆனந்தன் தாயை கொலை செய்தாரா அல்லது குடிக்க பணம் கேட்டு மறுத்த தன் தாயை கழுத்தை அறுத்து கொலை செய்தார் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்ற தாயை கழுத்தை அறுத்து கொலை செய்த ஆனந்தனுக்கு தூக்குத் தண்டனை அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆவேசத்துடன் கேட்டுக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக