தபால்
துறையின் அனைத்து சிறுசேமிப்புத் திட்டங்களும் அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் கிடைக்கும்
என்றும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக
கிராமப்புறப் பகுதிகளில் தபால் துறை செயல்பாடுகளை அளித்து, அனைத்து சேவைகளைப் பலப்படுத்தும்
நோக்கிலும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. அனைத்து சிறு சேமிப்புத் திட்டத்தின்
வசதிகளை அளிக்கும் வகையிலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கிராமப்புறங்களில்
1,31,113 கிளை அஞ்சலகங்கள் உள்ளன. தபால் சேவைகள், விரைவு அஞ்சல்கள், பார்சல்கள், மின்னணு
மணியார்டர், கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு போன்ற சேவைகளுடன், சேமிப்பு கணக்கு,
தொடர் வைப்பு நிதி, நீண்டகால வைப்பு நிதி, சுகன்யா சம்ரித்தி கணக்கு திட்டங்கள் என
சில திட்டங்களை மட்டுமே வழங்கி வருகின்றன.
ஆனால்
இந்த புதிய அறிவிப்பின் படி இனி, கிராமப்புற அஞ்சலகங்கள் மாதாந்திர வருவாய் சேமிப்பு
திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டங்கள், பொது வருங்கால
வைப்பு நிதி, கேவிபி உள்ளிட்ட சேவைகளையும் அளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சொல்லப்போனால்
நகர்புற மக்கள் நகர்புற அஞ்சல் அலுவலகங்களில் பெறப்படும் அனைத்து சேவைகளையும், கிராமப்புற
பகுதியில் வாழும் மக்களும் பெற முடியும். மக்களிடையே நல்ல பெயரை பெற்றிருக்கும் இத்தகைய
சிறு சேமிப்பு திட்டங்களில், மக்கள் நேரடியாக இனி தங்களது பகுதிகளில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில்
இந்த சேவைகளை எல்லாம் பெற்றுக் கொள்ள முடியும். ஆக இதன் மூலம் மக்கள் இனி நகர்புறங்களில்
உள்ள அலுவலகங்களை தேடி அலைய வேண்டியதில்லை.
இனி
தங்களை நாடி வரும் இந்த சிறு சேமிப்பு திட்டங்களின் மூலம் மக்கள் பயனடைந்து கொள்ளலாம்.
அதிலும் கொரோனா போன்றதொரு காலங்களில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலையில்,
தற்போது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கில்லை. ஏனெனில் சில பகுதிகளில் அடுத்தடுத்த
பகுதிக்குள் செல்ல முடிவதில்லை. ஆக இது போன்ற நெருக்கடியான காலங்களில் இது போன்ற சேவைகள்
மிக வரவேற்கதக்கவை தான்.
இன்றைய
காலகட்டத்தில் என்னதான் பல சிறுசேமிப்பு திட்டங்கள் இருந்தாலும், அரசின் இந்த சிறு
சேமிப்பு திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக