>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 21 ஜூலை, 2020

    ஜியோ என்ன பெரிய அப்பாடக்கரா..? வாயடைந்து போன சீன பெரும் தலைகள்..!!



    ரிலையன்ஸ் ஜியோ
    பொருளாதார வளர்ச்சியிலும், ஆயுத பலத்திலும், தொழில்நுட்ப வளர்ச்சியிலும் அமெரிக்காவுடன் போட்டிப்போடும் சீனாவின் இரண்டு மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனம் என்றால் அது டென்சென்ட் மற்றும் அலிபாபா நிறுவனங்கள் தான். சொல்லப்போனால் ஆசியாவிலேயே மிகப்பெரிய நிறுவனங்களாகத் திகழும் இந்நிறுவனங்களின் மதிப்பு தலா 600 பில்லியன் டாலர்.
    இவ்வளவு பெரிய நிறுவனத்திற்கு முன் ரிலையன்ஸ் ஜியோ என்ன செய்ய முடியும்..???
    ரிலையன்ஸ் ஜியோ
    ரிலையன்ஸ் ஜியோவின் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு முதல் கெமிக்கல், டெக்னாலஜி, ரீடைல், டெலிகாம் என உலகில் எந்த ஒரு வர்த்தகக் குழுமத்தில் இல்லாத ஒரு மிகப்பெரிய பல்வகை வர்த்தகப் பிரிவுகள் உள்ளது.
    டென்சென்ட் மற்றும் அலிபாபா நிறுவனங்களை ஒப்பிடுகையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மதிப்பில் 4ல் ஒரு பங்கு தான். ஆனால் வரும் காலத்தில் ஜியோ எப்படி இருக்கும் தெரியுமா..?
    ஜியோ Vs டென்சென்ட், அலிபாபா
    இன்றைய நிலையில் ஜியோ-வை சில டென்சென்ட் உடனும், இன்னும் சில அலிபாபா உடனும் ஒப்பிடுகின்றனர். ஆனால் ஜியோ டென்சென்ட் மற்றும் அலிபாபா ஆகிய நிறுவனங்களின் மொத்த கலவை.
    சீனாவில் டென்சென்ட் மற்றும் அலிபாபா உருவாக்கி ஒரு டிஜிட்டல் உலகை இந்தியாவில் உருவாக்கும் சக்தியும் அதற்கான சரியான தளத்தையும் ஜியோ வைத்துள்ளது. அடுத்த 3 முதல் 5 வருடத்தில் ரிலையன்ஸ் சுமார் 500 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தைச் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியமைக்கப் போகிறது எனப் பாங்க் ஆஃப் ஆமெரிக்கா தெரிவித்துள்ளது.
    அலிபாபா நிறுவனங்கள்
    ஈகாமர்ஸ்: டிமால் , அலிஎக்ஸ்பிரஸ், அலிபாபா.காம், 1888.காம், Taobao
    மார்கெட்டிங்: அலிமாமா.காம்
    கிளவுட்/டெக்: அலிகிளவுட்
    பேமெண்ட்ஸ்: Ant பைனான்சியல், அலிபே

    ஜியோ நிறுவனங்கள்
    ஈகாமர்ஸ்: ஜியோமார்ட்
    மார்கெட்டிங்: ஜியோ Ads
    கிளவுட்/டெக்: ஜியோ செக்யூரிட்டி, ஜியோ ஸ்மார்ட் செக்யூரிட்டி, ஜியோ கிளவுட், ஜியோ பிரவுசர், ஜியோ நெட் பேமெண்ட்ஸ்: ஜியோ POS, ஜியோ Money
    டென்சென்ட் vs ஜியோ
    இதபோல் டென்சென்ட் நிறுவனத்திடம் இருக்கும் அனைத்து விதமான சேவைகளும் இணையான சேவையை ஜியோ வைத்துள்ளது. அதில குறிப்பாக ஜியோ நியூஸ், ஜியோ சாட், ஜியோ டிவி, ஜியோ கேம்ஸ், ஜியோ ஸ்டோர், ஜியோ கால், ஜியோ ஹெல்த்ஹப், ஜியோ சினிமா, ஜியோ சாவன், ஜியோ ஜிஎஸ்டி, ஜியோ ஸ்விட்ச்.
    ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
    இதுமட்டும் அல்லாமல் எதிர்கால வளர்ச்சிக்குத் தற்போது கையில் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் துறைகள் அல்லாமல் புதிய துறையில் வர்த்தகத்தை மேம்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
    Jio Saavn - Music, Embibe - Edtech, Haptik - AI, Fynd - Ecommerce, Now floats - SaaS, Radisys - Open architecture business models, Reverie - Cloud-based language as a service platform, SankhyaSutra Labs - Software simulation services, Netradyne - Automotive AI, Asteria Aerospace - Robotics, FunToot - Edtech, EasyGov - SaaS platform, Kare Expert - Healthtech, Tesseract - AR/VR, NewJ - Media
    கூட்டணி
    இவை அனைத்தையும் உலகத் தர சேவையில் மேம்படுத்துவதற்கும், விரைவாகச் சேவைகளை இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்வதற்கும் தேவையான டிஜிட்டல் கட்டமைப்புகளை ஜியோ பேஸ்புக், கூகிள், மைக்ரோசாப்ட் ஆகிய உலகின் மிகப்பெரிய டெக் ஜாம்பவான் கூட்டணி வைத்துள்ளது.
    டெலிகாம்
    உலகில் எந்த ஒரு டெலிகாம் நிறுவனத்திடமும் இல்லாத ஒரு தளத்தை ஜியோ உருவாக்கி வருகிறது. ஆம் "சூப்பர் ஆப்", செய்திகள் முதல் இசை வரையில், கேம்ஸ் முதல் திரைப்படம் வரை என அனைத்து சேவைகளும் ஓரே இடத்தில் கிடைக்கும் ஒரு அற்புதத்தை ஜியோ உருவாக்கி வருகிறது.
    சீனா நிறுவனங்கள்
    முகேஷ் அம்பானியின் திட்டங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி சாத்தியமானால் சீனாவின் டென்சென்ட் மற்றும் அலிபாபா நிறுவனங்களை விடவும் மிகப்பெரிய நிறுவனமாக ஜியோ உருவெடுக்கும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.
    இப்போ சொல்லுங்க யாரு பெரிய அப்பாடக்கர்.. சீனாவின் டென்சென்ட், அலிபாபா-வா, இல்லை நம்ம ஊர் ஜியோ-வா..?

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக