Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 21 ஜூலை, 2020

திருமணம் செய்தால் தங்கையைத்தான் செய்வேன் - தலையில் அம்மி கல்லைப்போட்டு கொன்ற எட்விட்

தங்கயை திருமணம் செய்வேன் என்று கூறியதால் ரவுடியை அம்மிக்கல்லை தூக்கி போட்டே கொன்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
சென்னை ஆதம்பாக்கத்தில் சேர்ந்தவர் மணிகண்டன் இவர் மேல் பல கொலை வழக்கு மற்றும் அடிதடி என்று பல வழக்குகள் உள்ளன ,இவருக்கும் இவருடைய தாய் மாமன் மகன் எட்விட்டிற்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது மேலும் அப்படி இருந்தும் இருவரும் அடிக்கடி மச்சான் மாப்பிள்ளையாக உறவாடி கொள்வார்கள்.
இந்நிலையில் நேற்று இரவு இரண்டு பேரும் சேர்ந்து மது அருந்தும் பொழுது மணிகண்டன் போதையில் உன் தங்கச்சியை எனக்கு கல்யாணம் செய்து கொடு என்று எட்விட்டிடம் கூறியுள்ளார் ஆனால் எட்விட் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மறுப்பு தெரிவித்து விட்டு உன்னை மாதிரி ஒரு ரவுடிக்கு எனது தங்கையை கல்யாணம் பண்ணி வச்சா வாழ்க்கை வீணாகிவிடும் என்று கூறியுள்ளார் .
இதனால் மணிகண்டன் குடி போதையில் நான் திருமணம் செய்தால் உனது தந்தை மட்டுமே செய்வேன் என்று சொல்லிக்கொண்டே போதையில் கீழே விழுந்தார் இதனால் பதற்றமடைந்த எட்விட் நிஜமாகவே தங்கையை கல்யாணம் செய்து விடுவாரோ என்று மணிகண்டனை நினைத்து அச்சம் அடைந்தார் .
இந்த நிலையில் இரவு தூங்க முடியாமல் தவித்து வந்த எட்விட் விடியக்காலை வீட்டுக்கு வந்து அம்மிக்கல்லை எடுத்து கொண்டு தூங்கி கொண்டிருந்த மணிகண்டன் தலையில் போட்டு கொலை செய்து விட்டார் இதில் ரத்த வெள்ளத்தில் மணிகண்டன் உயிரிழந்தார் , மேலும் எட்விட் அங்கிருந்து தப்பி ஓடினார்.
மேலும் இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆதம்பாக்க போலீசார் மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் வழக்கு பதிவு செய்து தலைமறைவான எட்விட்டை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக