ஆதார்
அட்டையின் முக்கியத்துவத்தைப் பார்த்து, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) பயனர்களின்
வசதிக்காக ட்விட்டரில் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கத் தொடங்கியுள்ளது...
ஆதார்
அட்டை என்பது அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணம். இப்போதெல்லாம் குழந்தை பெறுவதில்
இருந்து அனைத்து அரசு திட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ள ஆதார் அட்டை (Aadhaar) வேண்டியது அவசியம்.
இந்நிலையில், நீங்கள் ஆதார் அட்டை இல்லாமல் எந்த முக்கியமான வேலையும் செய்ய
முடியாது. ஆதார் அட்டையின் முக்கியத்துவத்தைப் பார்த்து, பயனர்களின் வசதிக்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ட்விட்டர்
மூலம் அவர்களின் சிக்கல்களைத் தீர்க்கத் தொடங்கியுள்ளது. இப்போது நீங்கள் சமூக
தளமான ட்விட்டரின் உதவியுடன் உங்கள் பிரச்சினையை எழிதில் தீர்க்க முடியும்.
இப்போது
நீங்கள் ஆதார் அட்டை தொடர்பான ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், இதற்காக @UIDAI
மற்றும் @Aadhaar_Care இன் ட்விட்டர் பக்கத்திற்கு ட்வீட்
செய்யலாம். மேலும், ஆதார் மையத்தின் பிராந்திய அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ
ட்விட்டர் பக்கமும் வழங்கப்பட்டுள்ளது. இங்கே நீங்கள் உங்கள் புகாரை இங்கும்
ட்வீட் செய்யலாம்.
UIDAI
தற்போது அனைத்து வசதிகளையும் ஆன்லைனில் வழங்குகிறது. ஆதார் அட்டையில் பெயரை
மாற்றுவது முதல் தொலைபேசி எண் மாற்றுவது அல்லது வீட்டு முகவரியை மாற்றுவது போன்ற
அனைத்து தீர்வுகளையும் ஆன்லைனில் பெறலாம். மேலும், வாடிக்கையாளர் பராமரிப்பு எண்
1947-யை அழைப்பதன் மூலமும் இந்த உதவிகளை பெறலாம். இது தவிர, help@uidai.gov.in
க்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமும் தகவல்களைப் பெறலாம்.
இந்த
ஆண்டு ஜனவரியில் 'சாட்போட்' அம்சம் தொடங்கப்பட்டது..
இந்த
ஆண்டு ஜனவரியில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் சாட்போட்டை
அறிமுகப்படுத்தியது. மக்களின் கேள்விகளுக்கு ஆதார் சாட்போட்டில்
பதிலளிக்கப்படுகிறது. ஆதார் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பயனர்கள் உடனடியாக
பதிலைப் பெறலாம். சாட்போட் என்பது அரட்டை (Chat) இடைமுகமாக செயல்படும் ஒரு
மென்பொருள் பயன்பாடு ஆகும். இது செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் கேள்விகளுக்கு
பதிலளிக்கிறது.
இந்திய
தனித்துவ அடையாள ஆணையம் 2019 டிசம்பரில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, நாட்டில்
வாழும் 125 கோடி குடிமக்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக