Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 1 ஜூலை, 2020

மின்னஞ்சல் கண்டுபிடித்த தமிழன் பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்!

சிவா அய்யாதுரை அவர்கள் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் சாதனை புரிந்த விஞ்ஞானி ஆவார். சரியான ஆதாரங்கள் மூலம் மின்னஞ்சல் என்னும் முறையை கண்டுப்பிடித்தவர் இவர்தான் என்று அறியப்படுகிறது.
 
மின்னஞ்சல் கண்டுபிடித்த தமிழன் பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்!
மின்னஞ்சல் கண்டுபிடித்த தமிழன் பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்!
சிவா அய்யாதுரை அவர்கள் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் சாதனை புரிந்த விஞ்ஞானி ஆவார். சரியான ஆதாரங்கள் மூலம் மின்னஞ்சல் என்னும் முறையை கண்டுப்பிடித்தவர் இவர்தான் என்று அறியப்படுகிறது.
சிவா அய்யாதுரையின் வாழ்க்கை வரலாறு குழந்தைப்பருவம், வாழ்க்கை, சாதனைகள், படைப்புகள் ஆகியவற்றை வரிசையாக பார்ப்போம்.

சுருக்கமான சில விவரங்கள்
  • பிறந்தநாள்: 02 டிசம்பர் 1963
  • தேசியம்: இந்தியன்
  • பிரபலம்: இந்திய கணிணி பொறியாளர்
  • வயது: 56
  • ராசி: தனுசு
  • பிறந்த மாநிலம்: தமிழ்நாடு
  • பிரபலமான கண்டுபிடிப்பு: மின்னஞ்சல்
குடும்பம்
  • முன்னாள் மனைவி: ஃப்ரான் ட்ரெட்ஷர்
  • தந்தை: வெள்ளையப்ப அய்யாதுரை
  • தாய்: மீனாட்சி அய்யாதுரை
  • உடன் பிறந்தோர்: உமா தனபாலன்

சிவா அய்யாதுரை இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் சாதனை படைத்தவர் ஆவார். சில ஆதாரங்கள் மூலம் இவர்தான் மின்னஞ்சல் முறையை கண்டுப்பிடித்தார் என அறியப்படுகிறது.

1978 ஆம் ஆண்டு இவர் தனது 14 ஆவது வயதில் ஒரு கம்ப்யூட்டர் ப்ரோகிராமை உருவாக்கினார். இது இண்டர் ஆபிஸ் மெயில் சிஸ்டம் என்னும் முறையின் மின்னணு முறையாகும்.

இந்த கண்டுப்பிடிப்பிற்கு அவர் இ-மெயில் என்று பெயரிட்டார். இதற்கான காப்புரிமையை கோரி அமெரிக்காவில் அவர் விண்ணப்பம் ஒன்றை அளித்தார். அதன்படி 1982 ஆம் ஆண்டு தனது மென்பொருளுக்கான காப்புரிமையை பெற்றார். அன்று முதல் அதிகாரபூர்வமாக சிவா அய்யாதுரை இ-மெயில் என்னும் மின்னஞ்சலை கண்டுபிடித்தவரானார்.

சில நிறுவனங்கள் இவரது கண்டுபிடிப்பை ஏற்றுக்கொண்டாலும் பரவலாக அனைவரும் இவர் இ-மெயிலை கண்டுப்பிடித்ததை ஒப்புக்கொள்ளவில்லை. இந்த கண்டுப்பிடிப்புகான மரியாதை இணையத்தில் @ என்ற அடையாளத்தை அறிமுகப்படுத்திய ரேமண்ட் டாம்லின்சனுக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவில் இந்து மதத்தில் பிறந்த சிவா அய்யாதுரை தனது குழந்தை பருவத்திலேயே அமெரிக்கா சென்றுவிட்டார். அவர் ஒரு சிறந்த மாணவராக இருந்தார். இவர் யுனிவர்சிட்டி ஆப் மெடிசன் அண்ட் டென்சிட்டி (யு.எம்.டி.என்.ஜே) என்னும் பள்ளியில் தொண்டுகள் செய்து வந்தார்.

அவரின் திறனை கண்ட நிர்வாகம் கடித போக்குவரத்து கட்டமைப்பை மென்பொருள் மூலம் கணிணியில் செய்வது போல் உருவாக்குமாறு அவருக்கு சவால் விடுத்தனர். அதை வெற்றிகரமாக செய்து முடித்தார் அதுவே இமெயில் என்னும் மின்னஞ்சல் ஆகும்.

ஆனாலும் தனது படைப்புக்கான உலகளாவிய அங்கீகாரத்தை அவர் பெறவில்லை. அதற்கு அவரது இந்திய தோற்றமே காரணம் என சிலர் கூறுகின்றனர்.

குழந்தை பருவமும் ஆரம்ப வாழ்க்கையும்

சிவா அய்யாதுரை இந்தியாவில் உள்ள பம்பாயில் இந்து தமிழ் குடும்பத்தில் 02 டிசம்பர் 1963 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் தனது ஏழு வயதில் குடும்பத்தோடு அமெரிக்கா சென்றார். அங்கு அவர் சிறப்பான மாணவராக இருந்தார்.

நியுயார்க் பல்கலைகழகத்தின் இன்ஸ்ட்யூட் ஆஃப் மேத்தமெட்டிக்கல் சயின்ஸ் ஆப் நியூயார்க் என்ற கோடைக்கால பயிற்சியில் கம்ப்யூட்டர் ப்ரோகிராம் எனப்படும் நிரலாக்கத்தை பயின்றார்.

நியூ ஜெர்சியிலுள்ள லிவிங்ஸ்டன் உயர்நிலை பள்ளியில் பயின்றார். அங்கு படிக்கும்போதே யுனிவர்சிட்டி ஆப் மெடிசன் அண்ட் டென்சிட்டி (யு.எம்.டி.என்.ஜே) என்னும் பள்ளியில் தொண்டுகள் செய்து வந்தார்.

அங்குள்ள மேற்பார்வையாளர்களில் ஒருவரான டாக்டர் மெக்கல்.பி. மைக்கெல்சன் அவரது திறமைகளை நோக்கினார். அவர் சிவாவுக்கு ஒரு சவாலை வைத்தார். அதாவது காகித கடித போக்குவரத்தை கணிணியில் செய்வது போன்ற ஒரு ப்ரோகிராமை உருவாக்க சொன்னார்.

14 வயதே ஆகியிருந்த சிவா டிஜிட்டல் தகவல்களை உலகமெங்கும் அனுப்பவும் பெறவும் கூடிய ஒரு ப்ரோகிராமை உருவாக்குவது குறித்து கற்பனை செய்ய துவங்கினார். பிறகு அவர் பாதுகாப்பான மற்றும் பயன்படுத்துவதற்கு எளிதான கணிணி அஞ்சல் முறையை உருவாக்கினார்.

மாசூசெட்ஸ் இன்ஸ்டட்யூட் ஆஃப் டெக்னாலிஜியில் (எம்.ஐ.டி) பொறியியல் மற்றும் கணிணி அறிவியலில் இவர் இளங்கலை பட்டத்தை பெற்றார். விஷிவல் ஸ்டடிஸ் மற்றும் மீடியா லேபரட்டரி ஆஃப் சயின்டிஃபிக் விஷ்வலிசேஷன் என்கிற படிப்பின் கீழ் முதுகலை பட்டம் பெற்றார். அதே எம்.ஐ.டி யில் மெக்கானிக்கல் என்ஜினியரிங்காக மற்றொரு முதுகலை பட்டமும் பெற்றார்.

தொழில்

சிவா அய்யாதுரை 2007 ஆம் ஆண்டு எம்.ஐ.டியில் கணிணி உயிரியலில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றார். 2008 ஆம் ஆண்டு இந்திய பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தை குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க மாணவர்களுக்கான ஃபுல்பிரைட் நிதியுதவியை பெற்றார்.

அடுத்த ஆண்டு முதல் அவர் பேராசிரியர், கண்டுப்பிடிப்பாளர் மற்றும் கணிணி விஞ்ஞானி ஆகிய மூன்று பணிகளில் இருந்தார். சிவா ஒரு மிகபெரும் அறிவாளியான பல்துறை நிபுணர் ஆவார். இவரது கண்டிப்பிடிப்புகள் எல்லாம் தொழில்நுட்பம், மருத்துவம், ஊடகம் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இவர் சில நிறுவனங்களையும் வெற்றிகரமாக உருவாக்கி உள்ளார். அமெரிக்க ஒயிட் ஹவுஸ் போட்டியான அஞ்சல்களை தானாகவே வரிசைப்படுத்தும் நிகழ்வில் இவர் வென்ற பிறகு எக்கோ மெயில் எனும் நிறுவனத்தை துவங்கினார்.

இந்த நிறுவனம் மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகங்களில் மார்க்கெட்டிங் செய்தல், கண்காணிப்பு மற்றும் மேலாண்மை பணிகளை செய்துக்கொடுக்கும் நிறுவனமாகும். 2000 நிறுவனங்கள் மேல் இந்த நிறுவனம் மேலாண்மை (மேனஜ்மெண்ட்) செய்து வந்தது.

சிஸ்டம் ஹெல்த் ஆன்லைன் எஜிகேசன் என்னும் கல்விமுறையை நிறுவினார். பழைய மருத்துவ முறையான சித்த மருத்துவம் மற்றும் சீன பாரம்பரிய மருத்துவத்தை பற்றி அதில் கற்பிக்கப்பட்டது. நவீன மருத்துவத்திற்கும் பழைய மருத்துவத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை அவர் குறைக்க நினைத்தார்.

முக்கிய படைப்புகள்

  • தனது 14 வயதில் இமெயில் என்னும் முதல் மின்னஞ்சல் முறையை கண்டுபிடித்தார்.
  • அருங்காட்சியகம், தேசிய வானொலி மற்றும் நேஷனல் புவியியல் சொசைட்டி போன்ற இலாப நோக்கமற்று இயங்கும் அமைப்புகளுக்கு ஆதரவு அளித்தார்.
  • சாந்தி அறக்கட்டளை என்னும் தொண்டு நிறுவனத்தை உருவாக்கி நிதி திரட்டி அனாதை சிறுமிகளின் கல்விக்கு உதவி செய்தார்.
விருதுகள் மற்றும் சாதனைகள்

1981 ஆம் ஆண்டு அதிக பாதுக்காப்பான மின்னஞ்சல் அமைப்பின் மென்பொருள் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றிற்காக சிவா அய்யாதுரைக்கு “ஹானர்ஸ் குரூப் விருது” வழங்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கை

2014 செப்டம்பரில் நடிகை ஃபிரான் ட்ரெஷரும் சிவா அய்யாதுரையும் திருமணம் செய்துக்கொண்டதாக கூறப்பட்டது. இதுக்குறித்து அவர் கூறும்போது இது ஒரு சாதரண திருமணமே அல்ல என கூறியுள்ளார்.

தமிழராய் பிறந்து தனது 14 வயதிலேயே உலகம் போற்றும் கண்டுப்பிடிப்பை கண்டுப்பிடித்த சிவா அய்யாதுரை தமிழருக்கு பெருமை சேர்த்தவர்களில் முக்கியமானவர் ஆவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக