வெள்ளரிக்காய் ரொட்டி தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பிரபலமான ரெசிபி. இந்த ரொட்டியை சட்னி அல்லது சாம்பாரோடு சுவைத்து மகிழலாம். சிரோட்டி ரவை, தேங்காய் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து இந்த டிஷ் தயாரிக்கப்படுது. அரிசி மாவில் செய்யப்படும் இந்த சாஃப்டான ரொட்டி செய்வதற்கு ரொம்ப எளிமையானது, இதை தயாரிக்க நீங்கள் அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. இப்பவே இந்த ரொட்டியை எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சிக்கிட்டு உங்ள் பிரியமான குடும்ப உறுப்பினர்களுக்கு செஞ்சி கொடுத்து அசத்துங்க!
தேவையான பொருட்கள்:
1 1/2 கப் துருவிய வெள்ளரிக்காய்
3/4 கப் தேங்காய் பொடி
1 கப் ரவை மாவு
பிரதான உணவு
1 கைப்பிடியளவு நறுக்கிய கொத்தமல்லி இலை
தேவையான அளவு நறுக்கிய பச்சை மிளகாய்
தேவையான அளவு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்
தேவையான அளவு உப்பு
செய்முறை:
Step 1:
ஒரு கிண்ணத்தில் துருவிய வெள்ளரிக்காய், தேங்காய், கொத்தமல்லி தழை, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பை சேர்த்துக்கோங்க. எல்லா பொருட்களையும் நல்லா கலந்து விட்டுக்கோங்க.
Step 2:
இந்த கலவையில் ரவையையும் சேர்த்து நல்லா கலந்து மிருதுவான சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வாங்க.
Step 3:
ஒரு தவாவில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஒரு சிறிய மாவு உருண்டையை எடுத்து தவாவில் ரொட்டி போல வட்டமாக அழுத்தி தட்டிக் கொள்ளுங்க.
Step 4:
மிதமான தீயில் அடுப்பை வைத்து ரொட்டியை இரண்டு பக்கமும் திருப்பி திருப்பிப் போட்டு பொன்னிறமாகும் வரை 3 முதல் 4 நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக்கோங்க. இப்போ சூடான ரொட்டியுடன் உங்க விருப்பத்துக்கேத்தபடி சட்னி அல்லது சாம்பாரோட சாப்பிடுங்க!
சமையல் குறிப்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக