ஆண் பாலியல் தொழிலாளியாக மாறினால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் ஏமாறும் இளைஞர்களின் நிலை குறித்து இங்கே காணலாம்.
பொருளாதார நெருக்கடி நம்மை எப்படியெல்லாம்
பாதிக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. அதுவும் தற்போதைய கொரோனா காலத்தில்
பலரும் அடுத்தடுத்து வேலைகளை இழந்து வருகின்றனர். இதனால் வேறு வேலை தேடி அலைய முடியாத
சூழலும் ஏற்படுகிறது. கொரோனா நெருக்கடி இப்படியொரு நிலைக்கு தள்ளியிருக்கிறது. பல்வேறு
நிறுவனங்களிலும் வேலை இல்லை என்ற அறிவிப்பு மட்டுமே பார்க்க முடிகிறது. இந்த சூழலில்
ஜிகலோ மோசடி கும்பலிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதென்ன
‘ஜிகலோ’?
கொரோனா
ஊரடங்கால் பலர் வேலையிழப்பை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில்
வாரத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம். எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் என்று
சொன்னால் யார் தான் சும்மா இருப்பார்கள். அதேசமயம் எச்சரிக்கையாகவும் இருக்க
வேண்டும் அல்லவா? ஜிகலோ(ஆண் பாலியல் தொழிலாளி) வேலை மூலம் லட்சக்கணக்கில்
சம்பாதிக்கலாம் என்று ஏராளமான இணையதளங்கள் ஆசை வார்த்தைக் கூறி இளைஞர்களை
இழுக்கின்றன. பணத்தின் மீதான ஆசையால் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக
பலர் மோசடிக்காரர்களின் வலையில் சிக்கிக் கொள்கின்றனர்.
பொருளாதார நெருக்கடி
கர்நாடக
மாநிலம் பெங்களூருவில் உள்ள மான்யடா டெக் பார்க்கில் வேலை செய்து வரும் 26 வயதான
பொறியாளர் எஸ்.சுரேஷ்(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவரது நண்பர்கள்
வேலையிழப்பதை அருகில் இருந்து பார்த்தவர். இதனால் ஏற்படும் வலி, இழப்பு, சுமை
ஆகியவற்றை நன்கு அறிந்தவர். எனவே தனக்கும் வேலையிழப்பு ஏற்பட்டால் என்ன செய்வது
என்று சிந்தித்துள்ளார். வேறு வேலைக்கு தயாராக இருக்க வேண்டும் அல்லது அடுத்த வேலை
கிடைக்கும் வரை போதிய பணம் கையில் இருக்க வேண்டும்.
ஏமாற்றும்
இணையதளங்கள்
இந்த
சூழலில் தான் ஜிகலோ இணையதளங்கள் அறிமுகம் ஆகியுள்ளன. அதாவது ஆண் பாலியல்
தொழிலாளியாக வேலை செய்ய வேண்டும். ஓர் இரவிற்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் எனக்
கூவி கூவி விளம்பரம் செய்கின்றனர். பெண்களுக்கான சேவையாக இந்த வேலைக்கு நிறைய
ஆட்கள் தட்டுப்பாடு இருக்கிறது. உடனே சேர்ந்தால் நல்ல சம்பளம் என்று ஆசை வார்த்தை
கூறி அழைத்துள்ளனர். இதை நம்பி ஓர் இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு வாட்ஸ்-அப்
எண் மூலம் தனது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
லட்சக்கணக்கில் பண
மோசடி
அவர்களும்
சில பெண்களின் புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளனர். முதலில் சம்பந்தப்பட்ட
இணையதளத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் பதிவுக் கட்டணமாக ரூ.1,000 செலுத்துங்கள்
என்று கேட்டுள்ளார். பின்னர் உறுப்பினராக ரூ.12,500 கேட்கப்பட்டுள்ளது. இதையடுத்து
’ஸ்டேட்டஸ் கன்ஃபர்பேஷன் கோட்’ வசதிக்காக ரூ.70,000 செலுத்த வேண்டும். அப்போது
தான் பெண் வாடிக்கையாளர்களுக்கு ஓட்டல் அறையை முன்பதிவு செய்து அவர்களை சந்திக்க
முடியும். இந்த பணம் பின்னர் திருப்பிச் செலுத்தப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்விட்ச் ஆஃப் செய்த
கும்பல்
இதை
நம்பி அவர்கள் கேட்ட பணத்தை செலுத்தியுள்ளார். இதற்கு அடுத்தடுத்த மூன்று நாட்கள்
ஆனது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட மொபைல் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. வேறு
எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. சம்பந்தப்பட்ட இணையதளத்தையும் அணுக
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ் கிரைம் பிரிவு
போலீசில் புகார் அளித்துள்ளார். அவர்கள் கூறுகையில், ஜிகலோ வேலை தருவதாக கூறி
ஏராளமான போலி இணையதளங்கள் நடைமுறையில் இருக்கின்றன. எனவே நாம் தான் உஷாராக இருக்க
வேண்டும்.
இளைஞர்களுக்கு
எச்சரிக்கை
இதில்
ஏமாற்றப்பட்டவர்கள் பலரும் எங்களிடம் புகார் அளித்துள்ளதாக பரபரப்பு தகவலை
தெரிவித்தனர். இதேபோல் மற்றொரு நபர் ஜிகாலோ ஆசையால் ரூ.30,000 இழந்துள்ளார்.
அவரிடம் மத்திய கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகத்தின் சான்று எங்களிடம்
இருக்கிறது. இந்த தொழிலை செய்வதற்கு நாங்கள் அங்கீகாரம் பெற்றுள்ளோம் என்று
கூறியுள்ளனர். ஆனால் பின்னர் தான் தெரியவந்தது சான்றுகள் அனைத்தும் போலியானவை
என்று. மோசடி கும்பலின் விளம்பரத்தில் குறுகிய சேவைக்கு ரூ,8,000 என்றும், முழு
இரவிற்கு ரூ.12,000 என்றும் கூறி இளைஞர்களை கவர முயற்சித்துள்ளனர். இதுபோன்ற போலி
விளம்பரங்கள், இணையதளங்களை யாரும் நம்ப வேண்டாம். ஜிகலோ சேவை ஆபத்தானது என்று
இளைஞர்களுக்கு போலீசார் எச்சரித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக