கொரோனா வடிவத்தில் ஆலங்கட்டி மழை
உலகம் முழுவதையும் கொரோனா அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், சீனாவின் பீஜிங் மாகாணத்தில் கொரோனா போல பெரிய சைசில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. ஆலங்கட்டி மழை எப்பொழுது பனிக்கட்டி வடிவில் நீர்த்துளிகள் போலப் பொழியும் என்று தானே நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், சீனாவின் பீஜிங் மாகாணத்தில் பொழிந்த ஆலங்கட்டி மழை கொரோனா வைரஸ் வடிவில் பொழிந்துள்ளது.
திகைப்பில் ஆழ்த்தியுள்ள கொரோனா வடிவில் ஆலங்கட்டி
ஏற்கனவே, சீனாவிற்கும் கொரோனாவிற்கும் ஏராளமான தொடர்புகள் இருந்து வருகிறது, கொரோனாவின் பிறப்பிடமாகத் திகழும் சீனாவில் இப்பொழுது கொரோனா வடிவில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் சொல்லப் போனால் சீனாவில் மீண்டும் இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இன்னும் சிலர் இதை அதிசய நிகழ்வாகக் கருதுகின்றனர்.
வைரல் ஆகிவரும் ஆலங்கட்டி
கொரோனா வடிவத்தில் பொழிந்த இந்த அதிசய ஆலங்கட்டி மழை கடந்த 25ம் தேதி பெய்துள்ளது. கோடை இடியுடன் கூடிய மழையில் பெய்த இந்த ஆலங்கட்டிகளை பீஜிங் பகுதி மக்கள் ஸ்மார்ட்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த கொரோனா வடிவ ஆலங்கட்டி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரல் ஆகிவருகிறது.
இது கூட ஒருவகை கொரோனா தாக்குதலா? உண்மை என்ன?
உண்மையில் இது கூட ஒருவகை கொரோனா தாக்குதலோ என்று சிலர் கிளப்பிவிட்ட புரளியால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். இது தொடர்பாக வானிலை ஆய்வாளர்கள் கூறியதாவது ' இது ஒரு பொதுவான நிகழ்வு தான், இதில் அச்சப்பட எதுவுமில்லை என்றும், நிச்சயமாக இது கொரோனா தாக்கம் இல்லை என்றும்' அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர்.
கூர்மையான முனைகளுடன் உருண்டையாக இருக்கும் ஆலங்கட்டி
இருப்பினும், கொரோனா வடிவில் கூர்மையான முனைகளுடன் உருண்டையாக இருக்கும் இந்த ஆலங்கட்டி மழைத்துளிகளைப் பார்த்து, மக்கள் மனதில் புதிய அச்சம் உருவாகியுள்ளது. ஏற்கனவே பீஜிங் மாகாணத்தில் கொரோனா நோய்த்தொற்றின் புதிய அலை உருவெடுத்துள்ளதைத் தொடர்ந்து, சீனா அரை மில்லியன் மக்களைக் கடுமையான வுஹான் பாணியிலான ஊரடங்கிற்குத் தள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது முதல் முறை அல்ல
சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவரும் இந்த ஆலங்கட்டி பனிகற்கள், கொரோனா வைரஸின் தோற்றத்திற்கு ஏற்றது போலப் பல ஒற்றுமையுடன் இருப்பதைக் கண்டு நெட்டிசன்ஸ்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் வடிவத்தில் ஆலங்கட்டி மழை பொழிவது இது தான் முதல் முறை அல்ல, இதற்கு முன்பு கடந்த மாதம் அமெரிக்காவின் மெக்ஸிகோ மாகாணத்திலும் இதேபோன்ற கொரோனா வடிவ ஆலங்கட்டி மழை பொழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக