Poco M2 pro ஸ்மார்ட்போனானது ஜூலை 7 ஆம் தேதி அறிமுகமாகும் என போக்கோ நிறுவனத்தின் இந்திய அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்கோ எம் 2 ப்ரோ
போக்கோ எம் 2 ப்ரோ ஜூலை 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று போக்கோ இந்தியா தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. போக்கோ எக்ஸ் 2 க்குப் பிறகு, இந்த ஆண்டு நிறுவனம் அறிமுகம் செய்யும் இரண்டாவது ஸ்மார்ட்போன் இதுவாகும்.
டீசரில் காணப்பட்டுள்ள தகவல்
இதன் டீசரில் காணப்பட்டுள்ள தகவலின்படி போகோ அறிமுகம் செய்யும் இந்த புதிய மாடல் போன் குவால்காம் ஸ்னாப் டிராகன் அமைப்போடு வருகிறது. போகோ எம் 2 ப்ரோ குவாட் ரியர் கேமரா அமைப்போடும் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 7 ஆம் தேதி அறிமுகம்
இந்த டீசரின்படி போகோ எம் 2 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஜூலை 7 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என மதியம் 12 மணிக்கு இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவாட் ரியர் கேமரா அமைப்பு
போகோ எம் 2 ப்ரோ ஸ்மார்ட்போனானது சதுரவடிவிலான குவாட் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. இதையடுத்து இந்த ஸ்மார்ட்போனானது பின்புற பிரத்யேக வடிவமைப்பை கொண்டுள்ளது.
போக்கோ எம் 2 ப்ரோ விவரக்குறிப்புகள்
போகோ எம் 2 ப்ரோ ஸ்மார்ட்போனானது M2003J6CI என்ற எண்ணுடன் வெளிவருகிறது. இதேபோல் இதில் ப்ளூடூத் வி 5.o மற்றும் இரட்டை பேண்ட் வைபை இணைப்பு விருப்பங்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் விலை விவரங்கள்
இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 720 ஜி SoC-வுடன் வரும் என தகவல்கள் தெரிவிக்கிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 9 ப்ரோ ரூ.13,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வருகிறது, அதேபோல் இந்த ஸ்மார்ட்போனும் அது இணையான விலையில் விற்பனைக்கு வரு்ம என எதிர்பார்க்கப்படுகிறது.
மொபைல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக