பிரக்கோலி புற்று நோயைத் தடுக்கும் பண்பு நிறைந்தது.
இது புற்றுநோய்க்கு மட்டும் உதவாமல், கல்லீரல் செயல் திறனை அதிகரிக்கிறது. இது
போன்ற பண்புகள் உள்ளதால் இது ஒரு தனித்தன்மை வாய்ந்த காயாகும்.
பிரக்கோலி
நார்ச்சத்து நிறைந்தது. எனவே அது ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் திறன்
கொண்டது. பிரக்கோலியை வேகவைத்து உண்டால் அது உடலுக்கு மிகவும் நல்லது.
பிரக்கோலியை
வேகவைத்தோ அல்லது பச்சையாகவோ உண்ணலாம். இதனை நீங்கள் குழம்பாகவோ, பொரியலாகவோ
செய்து உண்ணலாம். சூப், சாலட் ஆகியவற்றில் சேர்த்து உண்ணலாம். பிரக்கோலி,
ருசியான சுவையும் மொறுமொறுப்புத் தன்மையும் கொண்டது. இது, எலும்பு சம்பந்தப்பட்ட
பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும். கால்சியம் மற்றும் வைட்டமின் கே அளவு
பிரக்கோலியில் அதிகம் உள்ளது.
இந்த
இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இது
ஆஸ்டியோபொரோசிஸ் என்னும் நோய் வராமல் தடுக்க உதவும். பிரக்கோலி வைட்டமின் டி
குறைப்பாட்டை தீர்க்க உதவும்.
இதில்
அதிக அளவில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே, வைட்டமின் டியின் வளர்சிதையை
சமநிலையில் வைக்க உதவுகிறது. வைட்டமின் டி மாத்திரை
எடுத்துக்கொள்பவர்களுக்கு பிரக்கோலி சரியான மாற்று.
பிரக்கோலி
நார்ச்சத்து நிறைந்தது. எனவே அது ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் திறன்
கொண்டது. பிரக்கோலியை வேகவைத்து உண்டால் அது உடலுக்கு மிகவும் நல்லது.
பிரக்கோலியை
ஆவியில் சமைத்தால் அதில் உள்ள நார்ச்சத்து செரிமான பித்த அமிலங்கள் இணைகின்றன.
இந்த இணைப்பினால் பித்த அமிலங்கள் வெளியேற்றப்பட்டு, கொழுப்பைக் குறைக்க
உதவுகிறது.
இதழ்கள்
நன்றாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். பிரக்கோலியின் நிறம் முழுவதும் ஒரே
மாதிரி சமமாக இருக்க வேண்டும். அது பழுப்படைந்து இருக்கக் கூடாது. பிரக்கோலி
இதழின் நடுவில் எந்த ஒரு மஞ்சள் அல்லது பழுத்த பூ போன்ற தோற்றம் இருக்கக்கூடாது.
அதன் தண்டு எந்தப் புள்ளிகளும் இல்லாமல் உறுதியாக இருக்க வேண்டும். ஒரு வேளை
அதில் இலைகள் இருந்தால் அவை பளிச் என இருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக