கொரோனா தாக்குதலுக்குப் பிறகு
அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளதால், உலகம் முழுதும் இணையச் சேவை பயன்பாடு
அதிகரித்துள்ளது. இதில் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு இணையத்தில் கடும் நெரிசலை
உருவாக்கியுள்ளது. இதை தான் இன்டர்நெட் டிராபிக் என்கிறார்கள். இன்டர்நெட் சரியாக
இல்லை என்றால் நிச்சயம் பயனர்களுக்கு கடுப்பாகத் தான் செய்யும். இதை சரி செய்ய
பொதுமக்களே புதிய முயற்சியில் களமிறங்கியுள்ளனர்.
அத்தியாவசியமாகவே மாறிவிட்ட
இன்டர்நெட் சேவை
இன்றைய காலகட்டத்தில் இன்டர்நெட்
பயன்பாடு என்பது ஒரு அத்தியாவசியமாகவே மாறிவிட்டது, அனைத்து சேவைகளும் டிஜிட்டல்
மயமாக மாறிவருகிறது. இதனால் இணையச் சேவை என்பது முக்கிய தேவையாகவே மாறிவிட்டது.
இந்த இன்டர்நெட் பிரச்சனை எங்கு எழுந்தது, அதற்கு மக்கள் கடுப்பானது ஏன்? என்ற
அனைத்தும் உங்களுக்கு இப்பொழுது விளங்கிவிடும். வளர்ந்த நாடான அமெரிக்காவில் தான்
இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.
நம்பமுடியாத குறைந்த இணைய வேகம்
சரியாகச் சொன்னால், அமெரிக்காவில்
உள்ள பென்சில்வேனியா என்ற இடத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த பகுதி
நகரத்திலிருந்து மிகத் தொலைவில் அழகிய எழில் சூழும் இயற்கை அமைப்புடன்
அமைந்துள்ளது. இந்த பகுதியில் இதுவரை சுமார் 8,03,645 குடும்பங்கள் வாழ்ந்து
வருகிறது. இங்கு இவர்களுக்குக் கிடைக்கும் இன்டர்நெட் வேகம் என்பது வினாடிக்கு
வெறும் 1 எம்பி முதல் 2 எம்பி என்ற ஆமை போல் வேகத்தில் கிடைக்கிறது.
இப்படி இருந்தாள் நீங்கள் என்ன
செய்திருப்பீர்கள்?
பாவம் இந்த வேகத்தில் இவர்கள் என்ன
செய்ய முடியுமென்று யோசித்துப் பாருங்கள். வாட்ஸ்ஆப்பில் சில நேரங்களில் மெசேஜ்
கூட அனுப்ப முடிவதில்லை என்று கொந்தளிக்கிறார்கள் இந்த மக்கள். பலரும் அவர்களின்
நெட்ஃபிலிக்ஸ் அக்கௌன்ட்டை முடக்கிவிட்டதாகவும் கூறியுள்ளனர். குறிப்பாக இந்த
கொரோனா காலத்தில் குழந்தைகளின் ஆன்லைன் வகுப்பிற்குப் பெரிய சிக்கலைச்
சந்தித்துள்ளனர்.
பல முறை புகார், ஓய்வு பெற்ற
ஊழியர்கள் ஒன்று சேர்ந்தனர்
இன்டர்நெட் வேகம் குறித்துப் பல முறை
புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இப்பகுதி மக்கள்
குற்றம்சாட்டுகின்றனர். நகரத்தைவிட்டுத் தொலைவில் உள்ளதால் இவ்வளவு தான் வேகம்
கிடைக்குமென்றும் பிரச்சனையைச் சரிசெய்ய வேண்டிய அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
கடுப்பான பொதுமக்களுக்கு உதவ அப்பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஒன்று
சேர்ந்து புதிய தீர்வை உருவாக்கியுள்ளனர்.
ரூரல் பிராட்பேண்ட் கோ-ஆப்பரேட்டிவ்
அமைப்பு
இவர்கள் ஒன்று சேர்ந்து RBC என்ற
ரூரல் பிராட்பேண்ட் கோ-ஆப்பரேட்டிவ் அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின்
மூலம் நிதி திரட்டி சொந்த செலவில் தங்களின் இன்டர்நெட் பிரச்சனைக்குத் தீர்வாக
புதிய டவரை அப்பகுதியில் நிறுவியுள்ளனர். டெலிகாம் நிறுவனங்கள் சரியாகப் பதில்
அளிக்காததால் விலையுயர்ந்த கேபிளுக்கு பதிலாக ரேடியோ சிக்னல்களைப் பயன்படுத்தி
இவர்கள் தங்களின் சொந்த வயர்லெஸ் நெட்வொர்க்கையே உருவாக்கியுள்ளனர்.
மலைமேல் நிலத்தை குதைக்கு எடுத்து
டவர் அமைப்பு
மிஃப்ளின் மற்றும் ஹண்டிங்டன்
மாவட்டங்களின் எல்லையில் உள்ள ஸ்டோன் மலையில் சுமார் 1,900 அடி உயரத்தில்
அமைந்துள்ள ஒரு இடத்தைக் குத்தகைக்கு எடுத்து அதில் இவர்களுடைய 120 அடி HAM டவரை
நிறுவி, தங்களின் சேவையைத் துவங்கியுள்ளனர்.
இப்பொழுது இவர்களின் அதிக வேகம் இது
தான்
இவர்களின் நெட்வொர்க் வேகம் இப்பொழுது
5 எம்பி முதல் 25 எம்பி வரை இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்பொழுது
வரை இந்த பகுதியில் உள்ள 40 குடும்பங்கள் இவர்களின் சேவையை விரும்பியுள்ளது.
தற்பொழுது உள்ள வேகத்தை வரும் நாட்களில் இன்னும் அதிக வேகமாக்க
திட்டமிட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக