Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 8 ஜூலை, 2020

நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதால் ஏற்படும் விளைவுகள்..!

நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பது உடலுக்கு கெடுதல் மிகுந்த பழக்கம் என்பதை மறந்துவிடாதீர்கள்...!

நிற்க நேரமில்லாமல் காலில் வெந்நீர் ஊற்றியது போல ஓடும் நமக்கு சரியான பராமரிப்பு இல்லாததால் உடலில் ஓராயிரம் நோய்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றது. நோய் வந்த பின் லட்சக் கணக்கில் பணத்தை கொட்டி செலவிடுவதைவிட வரும் முன் காப்போம் என்ற முன்னோர் வாக்குப்படி நடந்துகொள்வது நலம். இயற்கையாகவே நச்சுகளையும் பிற கேடு விளைவிக்கும் பொருட்களையும் தாமாகவே வெளியேற்றிவிடும் ஆற்றல் மனித உடலுக்கு உண்டு. 


சிறுநீர், மலம், இறந்த செல்கள், சுற்றுப்புறத்தில் இருந்து உடலினுள் நுழையும் பாக்டீரியா என அனைத்தும் தினசரி நமது உடலில் இருந்து வெளியேறிக்கொண்டேதான் உள்ளன. ஏதேனும் ஒன்று உடலிலேயே தங்கிவிட்டாலும் உபாதைகள்தான் விளையும். இந்த நச்சுகளை வெளியேற்றும் மெக்கானிசத்தை நாம் நமது பிஸியான வாழ்க்கை முறையினால் தொந்தரவு செய்து பல பிரச்னைகளுக்கு விந்திடுகிறோம். அப்படி நமது உடல் நலத்திற்கு பெரும் தொந்தரவாக அமைந்துவிடும் ஒன்று தான் 'நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பது'. இது கண்டிப்பாக செய்யக்கூடாத, செய்தால் நாளடைவில் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடும் பழக்கம்.

சிறுநீரை அடக்குவதன் மூலம் ஏற்படும் ஆபத்துக்கள்..... 

சிறுநீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும்  திறனை சிறுநீர் பையின் தசைகள் விரைவில் இழந்துவிடுகின்றன. 

இதனால் பின்னாளில் அவசரத்திற்கு கூட 2 நிமிடம் அடக்க முடியாமல் கட்டுப்பாட்டை இழந்து சிறுநீர் வெளியேறும் நிலை ஏற்பட்டுவிடும்.

எளிதில் சிறுநீரகத் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சிறுநீரில் உள்ள யூரியா தாது வெளியேற காலம் தாழ்த்தினால், சிறுநீரகத்தில் மணல் போல் அவை படிந்துவிடும். இவை காலபோக்கில்  யூரிக் கற்களாக மாறிவிடுகின்றன. 

பின் சிறுநீர் செல்லும் வழித்தடத்தை அது அடைத்துக்கொள்கிறது. வலியும் வேதனையும்தான் மிச்சம்.

சிறுநீர்ப் பை நிறைந்திருந்தால் ரத்தம், உட்கொள்ளும் நீர் ஆகியவற்றைச் சுத்திகரிக்கும் பணிகள் முடங்கிவிடும். அந்தச் சுத்திகரிப்பு செயல் முறையே திணறிவிடும்.

முக்கியமாக அடிவயிறு வலி, கவனச்சிதறல் மேலும் ஒற்றைத் தலைவலி வரை ஏற்படும். 

வீட்டில் உள்ளபோது குறைந்தபட்சம் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடியுங்கள். சிறுநீர் கழிக்க தோணும் போதே சென்று கழித்துவிடுங்கள். 

வேலை நேரங்களில் கூட முடிந்த வரை சிறுநீரை அடக்கிக்கொண்டு உட்காராதீர்கள். தண்ணீர் குடிக்காமல் பேலன்ஸ் செய்யவும் முயற்ச்சிக்காதீர்கள்.

.ஏனெனில் சீரான உடல் ஆரோக்கியத்திற்காக, நீர் நாள் முழுவதும் உடலுக்கு தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக