Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 27 ஜூலை, 2020

சர்ப்ப பூஜை செய்து வந்தால் சகல தோஷங்களையும் போக்கிடுமா...?


நாகங்கள் இந்து வழிபாட்டில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. ஜோதிட சாஸ்திரத்தில் சாயா கிரகங்கள், நிழல் கிரகங்கள் என்ற அமைப்பில் ராகு-கேதுவாக நாகங்கள் கிரக பரிபாலனம் செய்கின்றன.

இத்தகைய சர்வ வல்லமை படைத்த நாக தேவதைகளுக்கு ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று நாக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. சதுர்த்தி என்றால் நான்கு. இந்த நான்கு என்ற எண் அலைவரிசை எண் கணித சாஸ்திரப்படி ராகுவை குறிப்பதாகும். எனவே நான்காவது திதியான சதுர்த்தி அன்று வழிபடுவது மிகவும்  விசேஷமாகும். 

நாகங்களை பற்றி பல புராண கதைகள், கர்ண பரம்பரை கதைகள், அனுபவ உண்மைகள் என ஏராளம் உள்ளது. நாகம் ஆலய வழிபாடுகளில் முக்கிய இடத்தை  பெறுகிறது. 

அம்மன் கோயில்களில் அரச மரம், வேப்ப மரம் இணைந்து இருக்க அங்கே பாம்பு புற்று வழிபாடு பிரசித்தமாகும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பாம்பு புற்றுக்கு சந்தனம், மஞ்சள் பூசி குங்குமப் பொட்டு வைத்து, அனந்தன், வாசுகி, கிஷ்காலன், அப்ஜன், மகரி, கங்குபாலன், கார்கோடன், குளிகன், பத்மன் ஆகிய நாக  தேவர்களின் பெயர்களை உச்சரித்து புற்றுக்கு பால், முட்டை ஊற்றி வழிபடுவர். பல கோயில்களில் அம்மன்கள் நாக அம்சமாகவே அருள்பாலிக்கின்றனர்.

நாகாத்தம்மன், முப்பாத்தம்மன், காளியம்மன், மாரியம்மன் என ஒவ்வொரு ஊரிலும் பல விசேஷ பெயர்களில் வீற்றிருக்கிறாள் சக்தி. திருவேற்காட்டில் தேவி  கருமாரி அம்மன், நாக சக்தியாக அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறாள். இத்தலத்தில் மிகப் பெரிய புற்றுக் கோயில் உள்ளது. 

ஜோதிட சாஸ்திரப்படி நாகங்கள் ராகு, கேது என்ற பெயரில் கிரகங்களாக பரிபாலனம் செய்கின்றன. ராகு, யோக போகங்களுக்கும் கேது மோட்சம், ஞானத்திற்கும்  அதிபதியாக ஆதிக்கம் செலுத்துகின்றனர். மனித வாழ்வில் மிக முக்கிய அம்சமான திருமண விஷயத்திலும், குழந்தை பாக்யம் அருள்வதிலும் தோஷத்தை  ஏற்படுத்துவது இந்த ராகு கேதுதான். நாக தோஷம், சர்ப்ப தோஷம் என பல வகைகளில் தோஷங்களை ஏற்படுத்துவதில் ராகு-கேதுவுக்கு நிகர் யாரும் இல்லை  எனலாம். குழந்தை பிறக்கும்போது கழுத்தில் மாலை போட்டுக்கொண்டு பிறப்பது, கொடி சுற்றிக்கொண்டு பிறப்பது எல்லாம் ராகு-கேதுவின் வேலையாகும். 

இத்தகைய கடுமையான தோஷங்களை ஏற்படுத்தும் நாகங்களின் அம்சமான ராகு-கேதுவை நாக சதுர்த்தி தினத்தில் மனமுருகி வழிபட்டால் சகல தோஷ நிவர்த்தி  ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக