Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 27 ஜூலை, 2020

கோவையில் எச்சில் துப்பினால் இதுதான் தண்டனை!

coimbatore covid19 precaution activities

கோவை மாநகராட்சி பகுதிகளில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் ஷர்வன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது வீரியம் அடைந்ததுள்ளதை அடுத்து அரசுகளின் சார்பில் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அங்கு 3459ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில் கோவை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 100 வார்டுகளிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு - மருத்துவ கவுன்சில் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

இந்த நிலையில் இன்று கோவை இடையர்பாளையம், வேலாண்டிபாளையம், டிவிஎஸ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கிருமிநாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி ஆணையாளர் ஷர்வன்குமார் ஜடாவத் பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய அவர், “கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அந்தந்த பகுதியில் பொதுமக்கள் நேரில் சென்று மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம். சளி,காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.


கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியப்படாத நிலையில் முகக் கவசம் அணிதல், தனி மனித இடைவெளியைப் பின்பற்றுதல், கிருமி நாசினி பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலமே கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் பொது இடங்களில் எச்சில் துப்புவது மூலம் கொரோனா மற்றவர்களுக்கு எளிதாக பரவக்கூடும். இதனால் கோவை மாநகராட்சிப் பகுதியில் பொது இடத்தில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக