ஏர்டெல்
நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய சலுகையை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி
இந்நிறுவனத்திலிருந்து விங்க் மியூசிக் ஆனது #ExpresswithHellotune எனும் ஒரு
புதிய சலுகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பயனர்களின் தங்களின் தற்போதைய
மனநிலையையும் உணர்வையும் நண்பர்களுடன் மற்றும் உறவினர்களுடனும் இசை மூலம்
பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
அதாவது
பயனர்கள் விரும்பும் பாடவை ஹெலோ ட்யூன் ஆக வைப்பதின் வழியாக நமது தற்போதைய
மனநிலையையும் உணர்வையும் நண்பர்களுடன் மற்றும் உறவினர்களுடனும் பகிர்ந்துகொள்ள
முடியும்.
குறிப்பாக
ஏர்டெல் நிறுவனத்தின் ஹலோ ட்யூன்ஸ் அனைத்து ஏர்டெல் தேங்க்ஸ் பயனர்களுக்கும்
இலவசமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு சிறப்பு சலுகையாக
ஏர்டெல் ஹலோ ட்யூன்களை அனைத்து நான்-ஏர்டெல் தேங்க்ஸ் பயனர்களுக்கும்
14நாட்களுக்கு ஒருமுறை #ExpresswithHellotune இன் ஒரு பகுதியாக இருக்கச்
செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த
ஹெலோட்டூனை அமைப்பதற்கு, பயனர்கள் விங்க் மியூசிக் ஆப் பயன்பாட்டைத் திறக்க
வேண்டும், பின்பு மேல் வலதுபுறத்தில் உள்ள ஹெலோட்டூன் ஐகானைத் தேடி, மொழிகள்
மற்றும் வகைகளில் இருந்து ஒரு சிறப்பான ஹெலோட்டூனைத் தேர்வுசெய்யவேண்டும்.
தற்சமயம் பல்வேறு மக்கள் வீட்டில் இருந்தே வேலைசெய்யும் நிலையில் #ExpressWithHellotune மில்லியன் கணக்கான ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இசையை, அவர்களை இணைப்பதற்கான ஒரு வழியாக கருதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#ExpresswithHellotune
ஆனது அனைத்து ஏர்டெல் பயனர்களையும் ஒரு ஹலோ ட்யூனாக ஒரு பாடலை அமைக்க
அழைக்கிறது.பின்பு பயனர்கள் விங்க் மியூசிக் பயன்பாட்டில் 6 மில்லியனுக்கும்
அதிகமான பாடல்களைத் தேர்வுசெய்து அவற்றை இலவசமாக ஹெலோட்டூனாக அமைக்கலாம்.
இந்த
விங்க் மியூசிக்கின் லைப்ரரி ஆனது தமிழ், ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி, தெலுங்கு,
மலையாளம், கன்னடம், மராத்தி, குஜராத்தி, ஹரியான்வி,போஜ்புரி, பெங்காலி, ஒரியா,
அசாமி மற்றும் ராஜஸ்தானி உள்ளிட்ட பல்வேறு வகைகளிலும் 15-க்கும் மேல் உள்ள
மொழிகளிலும் இசையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக