ZEE5 நிறுவனம் இந்தியாவில் ஒரு
வெற்றிகரமான ஸ்ட்ரீமிங் தளமாக உள்ளது. நெட்ஃபிக்ஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும்
அமேசான் பிரைம் வீடியோ போன்ற OTT உள்ளடக்கத் தளங்களிலிருந்து அதன் போட்டி
இருந்தபோதிலும் , ZEE5 தனக்கென ஒரு தனித்துவமான சந்தை இடத்தை உருவாக்கியுள்ளது
என்பதே உண்மை. தற்பொழுது இந்த நிறுவனம் மலிவான விலையில் புதிய சந்தா திட்டத்தை
அறிமுகம் செய்துள்ளது.
ZEE5, OTT மாபெரும் இந்திய
ஸ்ட்ரீமர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இதனால் இந்தியர்களுக்குத் தேவையான பல சேவைகளை 12 மொழிகளில் வழங்கி வருகிறது. இந்தி
அடிப்படையிலான உள்ளடக்கத்தை அதிகம் வைத்துள்ளது. பயனர்களுக்காக 'ZEE5 Club' என்ற
புதிய சந்தா திட்டம் தற்பொழுது தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வெறும் ரூ .365
விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மாத சந்தா கட்டணம் இல்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள
இந்த புதிய ரூ.365 திட்டம் மாதாந்திர திட்டமாகத் தான் இருக்கும் என்று
நினைப்பவர்களுக்கு நிச்சயம் இது ஆச்சரியமளிக்கும். ஏனெனில் இந்த புதிய திட்டம்
நீங்கள் நினைப்பது போல ஒரு மாதாந்திர திட்டம் அல்ல, அதன் விலையைக் குறிக்கும்
எண்களைப் போல் 365 நாட்களுக்கான ஒரு வருடாந்திர சந்தா திட்டமாகும். வருடாந்திர
சந்தாவை இப்படி ஒரு மலிவு விலை கட்டத்தில் ZEE5 தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.
டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி
சந்தாவுக்கு எதிராக ZEE5 கிளப் போட்டி
புதிய ZEE5 கிளப் திட்டம் தற்பொழுது
ரூ .365 விலையில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி திட்டத்துடன் நேரடி போட்டியில்
களமிறங்கியுள்ளது. டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி திட்டம் ரூ. 399 என்ற விலையில்
கிடைக்கிறது. ZEE5 கிளப் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாக்கள் இரண்டும்
கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விலையிலும் வருடாந்திர சந்தா நன்மையிலும் வருகின்றது
என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ZEE5 மிகவும் மலிவானதாக இருக்கிறது.
ZEE5 கிளப் சந்தா மூலம், ZEE5
பிரீமியம் சந்தாவில் (12 மொழிகள்) உள்ள அனைத்து மொழிகளிலும் உள்ளடக்கத்தைப் பயனர்
பெறுவர். இந்த சந்தாவை எடுத்துக்கொள்வதன் நன்மை என்னவென்றால், பயனர்கள் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பப்படுவதற்கு முன்பு பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான 'கும்கம் பாக்யா
(Kumkum Bhagya)' போன்ற பல உள்ளடக்கங்களை முன்கூட்டியே பார்க்க முடியும்.
ZEE5 பிரீமியம் சந்தாவுடன் இந்த புதிய
ZEE5 கிளப் சந்தாவை ஒப்பிடும் போது, ZEE5 பிரீமியம் சந்தாவில் வழங்கப்படும் 4,500+
திரைப்படங்கள் வழங்கப்படுகிறது. அதேபோல், ZEE5
கிளப் சந்தாவில் 1,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த
சந்தா சேவையின் மூலம் பயனர்கள் 90க்கும் அதிகமான லைவ் டிவி சேனல்களையும்
பயன்படுத்திக்கொள்ளலாம்.
ZEE5 பிரீமியம் சந்தா தேர்வு செய்யும்
வாடிக்கையாளர்களுக்கு 5 திரைகளுக்கான அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோல், ZEE5
கிளப்பின் உள்ளடக்கத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு ஒரே நேரத்தில் அதிகபட்சமாக
2 திரைகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயனர் ZEE5 கிளப்பிலிருந்து ZEE5
பிரீமியம் சந்தாவிற்கு மேம்படுத்த விரும்பினால் , இரண்டு சந்தாக்களுக்கு இடையிலான
தொகையின் வித்தியாசத்தைச் செலுத்துவதன் மூலம் மாற்றம் செய்துகொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக