Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 17 ஜூலை, 2020

பூஜை செய்து வழிபடும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்...!!


பூஜைக்கு வைக்கப்படும் வெற்றிலைக்கு நுனியும், வாழைப்பழத்திற்கு காம்பும் அவசியம் இருக்க வேண்டும். வெற்றிலை பாக்கில் சுண்ணாம்பு இருக்கக் கூடாது. நமக்கு இடப்பக்கமாவும், சுவாமிக்கு வலப்பக்கமாவும் வெற்றிலைக்காம்பு இருக்க வேண்டும்.

தினசரி பூஜைக்கு அவல்பொறி, கடலை மற்றும் கல்கண்டு நைவேத்தியமாய் படைக்கலாம். பச்சரிசியில் சாதம் செய்துதான் கடவுளுக்குப் படைக்க வேண்டும். புழுங்கல் அரிசி கடவுளுக்கு படைக்க ஏற்றதில்லை. 

வினாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை மாதிரியான விசேஷ நாட்களில், நாகப்பழம், மாதுளை, கொய்யா, வாழைப்பழம், நெல்லி, இளந்தை, விளாம்பழம், புளியம்பழம்,  மாம்பழம் வைத்து வழிபடுவதை பார்த்திருக்கிறோம். இவை கிடைத்தால் மற்ற நாட்களிலும் வைத்து படைக்கலாம் தப்பில்லை.

வாழைப்பழத்தில் நாட்டு வாழைப்பழம் மட்டுமே பூஜைக்கு உகந்து கற்பூரவள்ளி, செவ்வாழை, பச்சை வாழையெல்லாம் பூஜைக்கு ஆகாது.

குடுமி இல்லாத தேங்காயும். அழுகல் தேங்காயும் பூஜைக்கு ஆகாது. தேங்காயை உடைத்தப்பின், முக்கண் இருக்கும் தேங்காயின் மேல்பாகம் நமக்கு இடைக்கை  பக்கம் கடவுளுக்கு வலப்பக்கமாக இருக்க வேண்டும். தேங்காயின் கீழ்ப்பாகம் நமக்கு வலப்பக்கமும் கடவுளுக்கு இடப்பக்கமும் இருக்க வேண்டும்

வினாயகரை துளசியால் அர்ச்சிக்கக்கூடாது. அதுப்போல் வைணவ கடவுளுக்கு அட்சதையும், சிவனுக்கு தாழம்பூவும், திருமகளுக்கு தும்பை பூவும், சரஸ்வதிக்கு  பவளமல்லியும், அம்பிகைக்கு அருகம்புல்லும் பூஜைக்கு ஏற்றதல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக