Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 1 ஜூலை, 2020

நடிகையின் கையெழுத்தை போட்டு கோர்ட்டையே ஏமாற்றிய பிரபல ஒளிப்பதிவாளர்


விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தில் தோழி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாய் சுதா. தெலுங்கு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் சாய் சுதா பிரபல ஒளிப்பதிவாளரான ஷ்யாம் கே. நாயுடு மீது காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் புகார் அளித்தார்.

சாய் சுதா தன் புகார் மனுவில் கூறியிருந்ததாவது,

ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே. நாயுடு என்னை கட்டாயப்படுத்தி தன்னை காதலிக்க வைத்தார். என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது திருமணம் செய்யாமல் ஏமாற்றுகிறார். என்னை நம்ப வைத்து ஏமாற்றிய ஷ்யாம் கே. நாயுடு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என அவர் அதில் தெரிவித்தார்.

சாய் சுதாவின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷ்யாம் கே. நாயுடுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து தனக்கும், சாய் சுதாவுக்கும் இடையே சமரசம் ஆகிவிட்டது என்று கூறி ஷ்யாம் கே. நாயுடு ஜாமீன் கோரினார். அவரின் மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.

ஷ்யாம் சாய் சுதாவிடம் சமரசம் எல்லாம் பேசவில்லையாம். மாறாக சாய் சுதாவின் கையெழுத்தை போலியாக போட்டு ஜாமீன் வாங்கியிருக்கிறார். இது குறித்து அறிந்த சாய் சுதா தன் கையெழுத்தை போலியாக போட்ட ஷ்யாம் கே. நாயுடு மீது மோசடி புகார் அளித்ததுடன், அவரின் ஜாமீனை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து நீதிமன்றம் ஷ்யாம் கே. நாயுடுவின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சாய் சுதாவை ஏமாற்றிய வழக்கால் ஏற்பட்ட பிரச்சனையே இன்னும் தீராத நிலையில் போலிக் கையெழுத்து போட்டு புதுப் பிரச்சனையில் சிக்கியுள்ளார் ஷ்யாம் கே. நாயுடு.

ஷ்யாம் கே. நாயுடு ஜாமீன் பெற செய்த காரியம் குறித்து அறிந்த தெலுங்கு திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரபல தெலுங்கு திரைப்பட ஒளிப்பதிவாளரான சோட்டா கே. நாயுடுவின் சகோதரர் தான் இந்த ஷ்யாம் கே. நாயுடு.

பாலகிருஷ்ணாவின் டிக்டேட்டர், மகேஷ் பாபுவின் போக்கிரி, பிசினஸ்மேன், ஜூனியர் என்.டி.ஆரின் டெம்பர், அல்லு அர்ஜுனின் ஜுலாயி, பவன் கல்யாணின் சூப்பர், பிரபாஸின் புஜ்ஜிகாடு, ராம் சரண் தேஜாவின் முதல் படமான சிறுத்தா உள்ளிட்ட பல தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஷ்யாம் கே. நாயுடு.

ஷ்யாம் கே. நாயுடுவுக்கும், சாய் சுதாவுக்கும் ஃபேஸ்புக் மூலம் தான் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் இருந்து அவர்கள் காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. ஷ்யாம் கே. நாயுடு முன்னதாக போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கினார்.

கடந்த 2017ம் ஆண்டு ஹைதராபாத்தில் போதைப் பொருள் வழக்கில் சிக்கிய கால்வின் மஸ்காரன்ஹாஸுடன் ஷ்யாம் கே. நாயுடுவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து போலீசார் நாயுடுவிடம் விசாரணை நடத்தினார்கள். ஷ்யாம் கே. நாயுடுவிடன் போலீசார் 10 மணிநேரம் விசாரணை நடத்தினார்கள்.

போதைப் பொருள் பிரச்சனையை அடுத்து ஷ்யாமின் பெயர் வேறு எந்த பிரச்சனையில் அடிபடாமல் இருந்த நிலையில் சாய் சுதா விஷயத்தில் கைது செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக