உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்க பொதுவாக பரிந்துரைக்கப்படும் மருந்து பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
ACE(angiotensin converting enzyme ) மற்றும் ARB (angiotensin II receptor blocker) ஆகிய மருந்துகள் இதய செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் போன்றவற்றிக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மருந்துகள் ஆஞ்சியோடென்சின் என்ற வேதிப்பொருளைத் தடுக்கின்றன. ஆஞ்சியோடென்சின் தமனிகள் குறுகுவதற்கு காரணமாக உள்ளது. தமனிகள் குறுகுவதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
கடந்த 2005 முதல் 2013 வரை ஹாங்காங்கில் 187,897 பெரியவர்களின் சுகாதார பதிவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். தமனிகள் குறுகுவதற்கு காரணமான ஆஞ்சியோடென்சின் என்ற வேதிப்பொருளைத் தடுக்க ACE(angiotensin converting enzyme ) மற்றும் ARB (angiotensin II receptor blocker) என்ற மருந்துகளை எடுத்துக் கொண்டவர்களுக்கு, அடுத்த மூன்று ஆண்டுகளில் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவது 22% குறைவாக உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த மருந்துகள் முழுமையாக பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்காது, ஆனால் பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்க பயன்படுகிறது என ஆய்வாளர்கள் கூறினர். பெருங்குடல் புற்றுநோய் இதனை ஆங்கிலத்தில் கோலன் கேன்சர் என்று கூறுவார்கள். இது உலகளவில் மூன்றாவது பொதுவான புற்றுநோயாகும்.மேலும், உலகளவில் புற்றுநோய் இறப்புக்கு இரண்டாவது முக்கிய காரணமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக