ரிலையன்ஸ்
ஜியோ சமீபத்தில் ஜியோமீட் என்ற வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டை அறிமுகம் செய்த
நிலையில் ஏர்டெல் விரைவில் வீடியோ கான்பரன்ஸிங் செயலியை அறிமுகம் செய்ய உள்ளது.
ஜியோமீட் என்ற வீடியோ
கான்பரன்சிங்
ரிலையன்ஸ்
ஜியோ சமீபத்தில் ஜியோமீட் என்ற வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டை
அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. 59 சீன விண்ணப்பங்களை அரசாங்கம் தடை செய்ததை அடுத்து
இந்த அறிவிப்பு வந்துள்ளது. இப்போது மற்றொரு தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல்,
ஜியோவைப் போன்ற ஒரு வீடியோ மாநாட்டு பயன்பாட்டை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
ஏர்டெல்
தனது புதிய சேவை
ஏர்டெல் தனது புதிய சேவையாக வீடியோ
கான்பரன்சிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவைக்கு பின்னர் ஒரே நேரத்தில்
அனைத்து கட்டத்திலும் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளன. ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில்
தனது புதிய சேவையான ஜியோமெட்ரி சேவையை ப்ளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தியுடன்,
ஏர்டெல் தனது வீடியோ கான்பரன்சிங் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம்
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில்
அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து
பல நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும் படி அறிவுறுத்தி
வருகின்றனர். அதேபோல் சில பள்ளி, கல்லூரிகளும் தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன்
வகுப்புகள் எடுத்து வருகிறது.
ஆன்லைன்
மீட்டிங்கள்
ஆன்லைன் வகுப்புகளுக்கும்,
நிறுவனங்களுக்குமான ஆன்லைன் மீட்டிங்களுக்கும் வீடியோகால் பிரதான தேவையாக இருந்து
வருகிறது. இதையடுத்து ஜூம் செயலி அனைத்து தரப்பினராலும் பயன்படுத்தப்பட்டு
வருகிறது, அதேபோல் ககுள் மீட் செயலியும் ஜூம் மீட்டுக்கு போட்டியாக
களமிறக்கப்பட்டது.
சீனா
செயலியான ஜூம் மீட்
இருப்பினும் சீனா செயலியான ஜூம் மீட்,
பயன்படுத்திய 5 லட்சம் கணக்குகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக சமீபத்தில்
தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு
ஒன்றை வெளியிட்டது. அதில் ஜூம் செயலி பாதுகாப்பானது அல்ல என்றும் இதனை யாரும்
பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது. அதேபோல் ஜூம் செயலி குறித்து
பல்வேறு புகார்களும் எழுந்தன.
கூகுள்
ப்ளே ஸ்டோரில் ஜியோ மீட் செயலி
ஜியோ மீட் சேவையானது வியாழக்கிழமை
சிறதளவு பயனர்களுடன் அறிமுகப்படுத்தியது. இந்த ஜியோ மீட் செயலி கூகுள் ப்ளே
ஸ்டோரில் கிடைக்கின்றன. ரிலையன்ஸ் ஜியோ தங்களது இந்த பயன்பாட்டை பிற செயலிக்கு
நேரடி போட்டியாக களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய ஜியோமீட் பிரத்யேக சேவை
குறித்து பார்க்கலாம்.
வீடியோ கான்பரன்சிங் அழைப்பு
ஜியோ மீட் சேவையில் வீடியோ
கான்பரன்சிங் அழைப்புகளை ஒரே நேரத்தில் 100 பங்கேற்பாளர்களை கொண்டிருக்கிறது. இந்த
மீட்டிங்கானது தொலைபேசி எண் அல்லது மெயில் ஐடி மூலம் இணைக்கலாம். இந்த வீடியோ செயலியானது
இலவசமாக பயனர்களுக்கு வழங்கப்படுகிறது அதோடு இது ஹெச்டி தர வீடியோ கால் சேவையை
ஆதரிக்கிறது.
பிரதமர் மோடி அழைப்பு
உலகத் தரம் வாய்ந்த இந்திய செயலிகளை
உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதற்கு ஆத்மனிர்பார்
பாரதத்திற்கான குறியீடு என்ற சவாலில் பங்கேற்கும்படி இந்தியர்களுக்கு அழைப்பு
விடுத்தார். இந்த நிலையில் முன்னதாக இந்திய செயலி ஜியோ, ஜியோ மீட் ஆப் அறிமுகம்
செய்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக