Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 7 ஜூலை, 2020

சீனாவுக்கு அடுத்த செக்.. இந்தியாவையடுத்து சீன ஆப்களை தடை செய்ய திட்டமிடும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா!


அமெரிக்கா குற்றசாட்டு

சீனாவுக்கு இது போறாத காலமே. ஏனெனில் கடந்த வாரத்தில் தான் இந்தியாவில் டிக்டாக் உள்பட 59 சீன ஆப்களை இந்தியா தடை செய்தது. இந்த நிலையில் தற்போது அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவும் சீனாவின் ஆப்களை தடை செய்ய ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏனெனில் சீனாவின் மிக பிரபலமான செயலியான டிக்டாக்கினால் பயனர்களின் தகவல்கள் பகிரப்படலாம். மேலும் இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்றும் பார்க்கப்படுகிறது.
பிரபலமான சமூக ஊடக பயன்பாடான டிக்டாக் மூலம், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் தரவுகளை சீனாவுடன் பகிர முடியும் என்றும் இந்த நாடுகள் அஞ்சுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நாடுகள் இது குறித்து ஆலோசித்து வருவதாகவும் பேசப்படுகிறது. இது சீனாவின் நிலைப்பாட்டை கடினப்படுத்துவதையும் குறிக்கிறது.
அமெரிக்கா குற்றசாட்டு
அமெரிக்காவில் டிக் டாக் மற்றும் மற்ற சீனா ஆப்களை தடை செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக சீனாவின் வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இதனை அரசு தீவிரமாக எடுத்துள்ளது. இந்த ஆப்பினால் அமெரிக்கா அரசியல்வாதிகள் பல முறைகள் விமர்ச்சிக்கப்பட்டனர். மேலும் இந்த ஆப் சீனா அரசாங்கத்திற்கு தரவினை திருப்பு அனுப்புவதாகவும் பல முறை குற்றம் சாட்டப்பட்டது.
சட்டம் என்ன சொல்கிறது?
ஆனால் டிக்டாக் நிறுவனமே சீனாவுக்கு வெளியே இருந்து தாங்கள் பணியாற்றுவதாகவும், மேலும் எந்தவொரு தரவும் சீனாவால் நிர்வகிக்கப்படவில்லை என்றும் டிக் டாக் தெரிவித்துள்ளது. எனினும் சீனாவில் 2017ம் ஆண்டின் தேசிய புலனாய்வு சட்டம் சீனாவை தளமாகக் கொண்ட அல்லது சீன உரிமையின் கீழ் உள்ள அனைத்து தொழில் நுட்ப நிறுவனங்களையும் நிர்வகிக்கிறது
தகவல்களை பகிர ஆப்சன் உண்டு
மேலும் இந்த சட்டமானது சீனா அரசாங்கம் கேட்கக்கூடிய எந்தவொரு தகவல்களையும், பகிர்ந்து கொள்ள அனைத்து வணிகங்களையும் கட்டாயப்படுத்துகின்றது. ஆக இதனால் தான் அமெரிக்கா ஆஸ்திரேயா போன்ற நாடுகள் இதனை தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
டிக்டாக் ஹாங்காங்கில் இருந்து நிறுத்த முடிவு
டிக் டாக்கினை பொறுத்தவரையில் அது பார்ப்பதற்கு எளிதாக தோன்றலாம். ஆனால் அது உண்மையில்லை என்றும் ஒரு அறிக்கை கூறுகின்றது. இதற்கிடையில் விரைவில் ஹாங்காங்கில் இருந்து டிக் டாக் வெளியேறக்கூடும் என்றும் கூறப்படுகிறது. டிக்டாக்கின் செய்தித் தொடர்பாளரும் இதனை உறுதிப்படுத்தும் விதமாக, சீனாவில் அதன் செயல்பாட்டினை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இனியும் தடை செய்யலாம்
உலகளவில் பிரபலமாகி வரும் இந்த ஆப்பினால் இப்படி ஒரு பிரச்சனையை இந்தியா உள்பட பல நாடுகள் கூறி வரும் நிலையில், இன்னும் பல நாடுகள் இந்த ஆப்பினை தடை செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக