Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 6 ஜூலை, 2020

இரவு தாமதமாக தூங்கினால் ஆஸ்துமா நிச்சயம் என ஆராய்சியில் திடுக்கிடும் தகவல்

இரவு தாமதமாக தூங்கினால் ஆஸ்துமா நிச்சயம் என ஆராய்சியில் திடுக்கிடும் தகவல்

இரவில் தாமதமாக தூங்கி காலையில் தாமதமாக எழுந்திருப்பவர்களுக்கு ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை நோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ERJ Open Research என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வின் படி, உடலின் உள் கடிகாரத்துடன் ஆஸ்துமா அறிகுறிகள் வலுவாக இணைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட தூக்க விருப்பத்தேர்வுகள் இளம் தலைமுறையினருக்கு ஆஸ்துமா அபாயத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பது தொடர்பான முதல் ஆய்வு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வு இளைஞர்கள் இரவில் உரிய நேரத்தில் தூங்குவதன் முக்கியத்துவத்தை வலுப்படுத்துகிறது என்றும், இது பல புதிய விஷயங்களுக்கு அடிப்படை ஆய்வாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
தூக்கம் இளைஞர்களின் சுவாச ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்ற ஆராய்ச்சியை கனடாவின் University of Alberta பல்கலைக்கழகத்தில் நுரையீரல் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த டாக்டர் சுபப்ரதா மொய்த்ரா தலைமையிலான ஆய்வுக் குழு மேற்கொண்டது.
இந்த ஆய்வு, ஸ்பெயினின் பார்சிலோனா இன்ஸ்டிடியூட் ஆப் குளோபல் ஹெல்த் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டது. "உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை நோய்கள் பொதுவானவை, இந்த நோய்கள் மேலும் அதிகரித்து வருகிறது. இந்த அதிகரிப்புக்கு, மாசுபாடு மற்றும் சிகரெட் புகை உட்பட சில காரணங்களைச் சொல்லலாம். ஆனால் நாம் இன்னும் பலவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும்" என்று டாக்டர் சுபப்ரதா மொய்த்ரா கூறுகிறார்.
தூக்கம் மற்றும் தூக்கத்திற்கான ஹார்மோன் (sleep hormone) மெலடோனின் (melatonin) ஆஸ்துமாவை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது, எனவே இளைஞர்கள் தாமதமாகத் தூங்குவது மற்றும் சீக்கிரமாக படுக்கைக்குச் செல்வது குறித்து ஆய்வு செய்ய விடும்பினோம்” என்று ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்தனர்.
"இந்த ஆய்வில், இந்தியாவின்மேற்கு வங்க மாநிலத்தில் 13 அல்லது 14 வயதுடைய 1,684 இளம் பருவத்தினர், ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை தொடர்பான நோய்களின் பரவல் மற்றும் ஆபத்து காரணிகள் என்னும் Prevalence and Risk Factors of Asthma and Allergy-Related Diseases among Adolescents  (PERFORMANCE) ஆய்வில் பங்கேற்றனர். ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் மூச்சுத்திணறல், ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை நாசியழற்சி அறிகுறிகள், மூக்கு ஒழுகுதல் மற்றும் தும்முவது பற்றி கேட்கப்பட்டது.
அவர்கள் ’மாலை வகைகள்’ (evening types), அல்லது ‘காலை வகைகள்’ (morning types) அல்லது இடையில் இருக்கிறார்களா என்று தீர்மானிக்க தொடர்ச்சியான கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன. அதாவது மாலை அல்லது இரவின் எந்த நேரம் அவர்கள் சோர்வாக இருக்கிறார்கள், அவர்கள் எப்போது எழுந்திருப்பார்கள், காலையில் அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 
பதின்வயதினரின் அறிகுறிகளை அவர்களின் தூக்க விருப்பங்களுடன் ஒப்பிட்டு, ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமைகளை பாதிக்கும் என்று அறியப்படும் பிற காரணிகளை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த ஆராய்சியை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.
இரவு தாமதமாக தூங்கச் செல்லும் பதின்ம வயதினருக்கு, இரவு நேரத்தில் சரியான நேரத்தில் படுக்கைக்கு செல்பவர்களுடன் ஒப்பிடுகையில் ஆஸ்துமா இருப்பதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாக இருந்தது தெரியவந்தது. அதுமட்டுமல்ல, தாமதமாக தூங்குபவர்களுக்கு, ஒவ்வாமை மற்றும் நாசியழற்சி பாதிக்கப்படுவதற்கான ஆபத்து இரு மடங்கு அதிகமாக இருப்பதையும் இந்த ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. 
"விருப்பமான தூக்க நேரம் மற்றும் ஆஸ்துமா, ஒவ்வாமை ஆகியவற்றுக்கு இடையில் தொடர்பு இருப்பதாக எங்கள் முடிவுகள் தெரிவிக்கின்றன. தாமதமாக தூங்கச் செல்வது இளைஞர்களுக்கு ஆஸ்துமாவை ஏற்படுத்துகிறது என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றாலும், மெலடோனின் தூக்க ஹார்மோன் பெரும்பாலும் தாமதமாகத் தூங்குபவர்களின் உடல் இயக்கத்தில் நாளடைவில் சிக்கலை ஏற்படுத்தி ஒவ்வாமைக்கு எதிர்வினையாற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்பதை உறுதியாக சொல்ல முடியும்” என்று டாக்டர் சுபப்ரதா மொய்த்ரா கூறுகிறார். 
"குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மொபைல் போன், டேப்லெட்டுகள் மற்றும் பிற சாதனங்களிலிருந்து சற்று முன்னதாகவே விலகி வந்து, தூக்கத்தை அரவணைத்துக் கொண்டால் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை அபாயத்தை குறைக்க உதவும். இது இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன்று” என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். " PERFORMANCE ஆய்வின் இரண்டாம் கட்டம் 2028-29 இல் திட்டமிடப்பட்டுள்ளது.  அதாவது தற்போது கிடைத்துள்ள முடிவுகளை, அடுத்த சில ஆண்டுகளுக்கு பின் ஒப்பிட்டுப் பார்த்து, நிலைமையில் ஏதேனும் மாற்றம்  மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை புதிய இளைஞர்களின் குழுவுடன் மீண்டும் ஆய்வு நடத்தப்படும்.  
European Respiratory Society புரொபஸர் தியரி ட்ரூஸ்டர்ஸ் ஐரோப்பிய சுவாச சங்கத்தின் தலைவர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை. அவரது கருத்துப்படி, "குழந்தைகள் மற்றும் டீனேஜர்களில் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை ஏன் அதிகரித்து வருகிறது என்பதைப் பற்றி நாம் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும், அப்போது தான் இந்த பிரச்சனைகளைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிய முடியும்". 
அவரவர் வாழ்க்கை முறைக்கு ஏற்ப பதின்வயதினருக்கு வெவ்வேறு தூக்க விருப்பங்கள் உள்ளன. இதுபோன்ற தனிநபர் விருப்பமானது ஆரோக்கியத்தில் எந்த அளவு பங்கை வகிக்கிறது என்பதை ஆராயும் முதல் ஆய்வு இதுவாகும்.  ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை ஆபத்து தொடர்பன இந்த ஆய்வு சுவாரஸ்யமான மற்றும் முக்கியமான கோணத்தைக் கொடுத்திருக்கிறது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நன்றாக தூங்குவது முக்கியம் என்பதை நாம் ஏற்கனவே நன்கு அறிவோம், எனவே நாம் இரவு நேரத்தில் விரைவில் நித்திரையை அணைப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக