மதுரையில் பழிக்கு பழி வாங்கும் நோக்கில் விரோதம் வளர்க்கும் வகையில்
போஸ்டர் ஒட்டிய சிறுவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். கஞ்சா வியாபாரியான இவர் கடந்த ஆண்டு முன்பு முன்பகை காரணமாக சிலரால் வெட்டி கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய முருகன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு புகுந்த மர்ம கும்பல் அவரை சராமாரியாக வெட்டிக் கொன்றுள்ளது.
இந்நிலையில் ராஜசேகரின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலிக்காக அவரது நண்பர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் பழிக்கு பழி வாங்கும் நோக்கில் வன்மமாக வார்த்தைகளை உபயோகித்திருந்ததை கண்ட போலீஸார் அந்த போஸ்டர் நபர்களை தேட தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கரும்பாலை பகுதியை சேர்ந்த 16, 17 வயது கொண்ட சிறார்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக