ஆரோக்கியமான எலும்புகள் ஆரோக்கியமான
உடலுக்கான அடிப்படையாகும். வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளுக்கு பால்
குடிப்பதும், கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும் மட்டுமே தீர்வு என்று
குழந்தை பருவத்திலிருந்தே நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் நம்முடைய வாழ்க்கை
முறை மற்றும் பழக்கவழக்கங்கள் நம் எலும்பு ஆரோக்கியத்திலும் தாக்கத்தை
ஏற்படுத்துகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?
உண்மையில், நம் எலும்புகள் நம் உடல்
நிலைமைகளுக்கு ஏற்றவாறு மாறுகின்றன, நம்முடைய உடல் ஆரோக்கியம்தான் எலும்புகளின்
ஆரோக்கியமாகும். இருப்பினும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைத் தழுவுவது எலும்பு
ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கும். நம்முடைய எந்தெந்த பழக்கங்கள் எலும்புகளை
பலவீனமடைய செய்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
உப்பு அதிகமான உணவுகளை சாப்பிடுவது
அதிகப்படியான உப்பு உட்கொள்வது
ஆரோக்கியத்தை பாதிக்கும், இறுதியில் இது எலும்பு முறிவுகளின் அபாயத்தை
அதிகரிக்கும். அதிக சோடியம் நிறைந்த உணவுகள் மாதவிடாய் நின்ற அறிகுறிகளால்
பாதிக்கப்பட்ட பெண்களில் எலும்புகளின் அடர்த்தியையும் பாதிக்கும்.
சூரிய ஒளி படாமல் இருப்பது
வைட்டமின் டி-இன் சிறந்த ஆதாரம் சூரிய
ஒளியாகும். சூரிய கதிர்களில் வைட்டமின் டி இருப்பது நம் உடலுக்கு கால்சியத்தை
உறிஞ்ச உதவுகிறது. 30-40 நிமிட சூரிய ஒளி வெளிப்பாடு கூட எலும்பு தாது அடர்த்தி
மற்றும் எலும்புகள் மற்றும் தசைநார்கள் பலப்படுத்த உதவுகிறது. மேலும், இது எலும்பு
முறிவுகளிலிருந்தும் தடுக்கிறது.
அதிகளவு மது அருந்துதல்
அதிகப்படியான ஆல்கஹால் உங்கள் எலும்பு
ஆரோக்கியத்தை பாதிக்கும். ஒரு சில ஆய்வுகளின்படி, அதிகப்படியான மது அருந்துதல்
கால்சியத்தை உறிஞ்சும் உடலின் திறனைக் குறைக்கிறது. ஆல்கஹால் வழக்கமாக அல்லது
அதிகமாக உட்கொள்வது இரைப்பைக் குழாயைப் பாதிக்கிறது, இதனால் நாம் உண்ணும் உணவில்
இருந்து கால்சியத்தை பிரித்தெடுக்கும் உடலின் திறன் குறைகிறது. இது உடலில்
கார்டிசோலின் அளவையும் அதிகரிக்கிறது, இது குறைந்த எலும்பு தாது அடர்த்திக்கு
வழிவகுக்கிறது. பெண்களில் எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும் ஈஸ்ட்ரோஜன் அளவைக்
குறைப்பதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தில் உங்களை வைக்கலாம்.
காற்று தூய்மையின்மை
உண்மைதான், காற்றின் தரம் உங்கள்
எலும்பு ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்று நீங்கள் நினைத்திருக்க மாட்டீர்கள்,
ஆனால் நகர்ப்புறங்களில் வாழ்பவர்களின் மோசமான எலும்பு ஆரோக்கியத்திற்கு இது
முக்கிய காரணமாக உள்ளது, அங்கு காற்றின் தரம் குறைவாக உள்ளது. காற்று மாசுபாடு
ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கிறது. ஒரு ஆய்வின்படி, காற்றில் சுற்றுப்புற
துகள்களின் அளவின் ஒரு சிறிய உயர்வு கூட எலும்பு முறிவு அபாயத்தை அதிகரிக்கும்.
எனவே, தரமில்லாத காற்று இருக்குமிடத்தில் வாழும்போது அதற்கான முன்னெச்சரிக்கைகளை
எடுக்க வேண்டியது அவசியமாகும்.
டயட்
உங்கள் உணவில் ஒமேகா -3 நிறைந்த
கொழுப்பு அமில உணவுகளை சேர்ப்பது உடலில் வைட்டமின் டி அளவை குறிப்பிடத்தக்க அளவில்
அதிகரிக்கும் மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆரோக்கியமான பழக்கங்களுடன்
ஆரோக்கிய உணவுகள் இணையும்போதுதான் அது முழுமையான பலன்களை வழங்கும். எனவே,
பதப்படுத்தப்பட்ட அல்லது ஜங்க் உணவுகளைத் தவிர்த்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை
மேம்படுத்த ஆரோக்கியமான இயற்கை உணவுகளுக்குச் செல்லுங்கள். இது தவிர, நல்ல உணவு
மற்றும் ஆரோக்கியமான பழக்கங்களுடன், உடற்பயிற்சி, எடை குறைப்பு பயிற்சி அல்லது
யோகாவும் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக