ஆர்யா
மற்றும் சாயிஷா இணைந்து நடித்து முடித்துள்ள டெடி படத்தினை ஓடிடியில் ரிலீஸ் செய்ய
திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா
தொற்று காரணமாக சினிமாத் துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட
மூன்று மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக ரிலீஸ்க்கு தயாராக
இருந்த பல படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர்.
அந்த
வகையில் சமீபத்தில் ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' மற்றும் கீர்த்தி சுரேஷின் '
பெங்குயின்' ஆகிய படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸாகி பெரும் வரவேற்பைப்
பெற்றது. அது மட்டுமின்றி காயத்ரி ரகுராம் அவர்களின் 'யாதுமாகி நின்றாய்' என்ற
படமும் Zee5 தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் வரலட்சுமி சரத்குமார்
நடிக்கும் 'டேனி' என்ற படமும், யோகிபாபுவின் 'காக்டெய்ல்' என்ற படமும் Zee5
ல் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
இந்த
நிலையில் தற்போது ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து நடித்துள்ள 'டெடி' படத்தினை
ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது மிருதன், டிக்
டிக் டிக் ஆகிய படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் டெடி படத்தை இயக்கியுள்ளார்.
ஸ்டுடியோ
கிரீன் பேனர்ஸ் வழங்கும் இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மேலும் இந்த
படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். மேலும் மகிழ் திருமேனி, கருணாகரன், சாக்ஷி
அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டெடி பொம்மையும் இவர்களுடன்
இணைந்து நடிக்கும்படி படம் உருவாகியுள்ளது.
ஆர்யா
மற்றும் சாயிஷாவின் முதலாமாண்டு திருமண விழாவில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்கள்
மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படத்தை ஓடிடியில் வெளியிட
பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதனை குறித்த
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக