Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 2 ஜூலை, 2020

தங்கைக்காக பழிக்கு பழி; சிறைக்குள் மரண வெயிட்டிங் மர்டர் - மிரண்டு போன திகார் சிறை!

டெல்லியில் உள்ள திகார் சிறை எண் 5ல் ஜாகிர்(21) என்ற இளைஞர் 2018ஆம் ஆண்டு கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

அவர் சிறைக்குள் கொலை சம்பவத்தை அரங்கேற்ற திட்டமிட்டிருந்தார். இதற்காக சிறிய இரும்பு துண்டை எடுத்து கொலை செய்வதற்கு கூரிய ஆயுதமாக மாற்றியுள்ளார். 

அடுத்த சில மாதங்களுக்கு அந்த ஆயுதத்தை சிறையின் பல்வேறு இடங்களில் மறைத்து வைத்திருக்கிறார். சிறைத்துறை காவலர்கள் கண்ணில் படாதவாறு பக்கா பிளான் போட்டு செயல்படுத்தி வந்துள்ளார்.

தனது கொலை திட்டத்தை அரங்கேற்றுவதற்கு சில வாரங்கள் முன்பு தனது அறையில் இருந்த கைதியுடன் மோதலில் ஈடுபட்டு காயத்தை ஏற்படுத்திக் கொண்டார். 

இதையடுத்து சிறை எண் 8க்கு ஜாகிர் மாற்றம் செய்யப்பட்டார். அந்த பிரிவில் தான் பழிவாங்க வேண்டிய மெஹ்தாப்(27) என்ற நபர் இருந்துள்ளார்.

அதாவது தரைத்தளத்தில் ஜாகிரும், முதல் தளத்தில் மெஹ்தாப்பும் இருந்துள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு மெஹ்தாப்பின் நடவடிக்கைகளை ஜாகிர் கண்காணித்து வந்துள்ளார். 

இதையடுத்து காலையில் அசெம்பிளி நேரத்தை கொலை செய்ய தேர்வு செய்துள்ளார். அந்த நேரத்தில் தான் முதல் தளம் முழுவதும் காலியாக இருக்கும்.

இந்நிலையில் கடந்த திங்கள் அன்று முதலாவது தளத்திற்கு சென்று தொழுகை முடித்து மெஹ்தாப் திரும்பி வரும் வரை ஜாகிர் காத்திருந்தார். சரியான நேரத்தில் பின்புறமிருந்து தாக்கி கொலை செய்துள்ளார். 

இந்த பழிவாங்கும் செயலுக்கு பின்னணி கதை ஒன்று இருக்கிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு மைனர் பெண்ணை மெஜ்தாப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த அவமானம் தாங்காமல் அச்சிறுமி தற்கொலை செய்து கொண்டார். 

அப்போது டீன் ஏஜ் சிறுவனாக இருந்தவர் ஜாகிர். தனது உறவினர் வீட்டு பெண்ணிற்கு ஏற்பட்ட நிலையை எண்ணி மிகவும் வேதனையடைந்துள்ளார்.

அச்சிறுமியின் குடும்பத்தை நினைத்து ஜாகிர் துயரத்தில் ஆழ்த்துள்ளார். இதையடுத்து குற்றவாளிக்கு தக்க பாடம் கற்பிக்க நினைத்துள்ளார். இதற்காக வேண்டுமென்றே 2018ஆம் ஆண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றுள்ளார்.

கடந்த திங்கள் அன்று திகார் சிறையில் அரங்கேறிய கொலை காவல்துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக சிறைக்குள் கைதிகளை அறை மாற்றும் விவகாரத்தில் மிகவும் கவனமாக செயல்பட காவல்துறை திட்டமிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக