![Digital banking: 3 நகரங்களில் SBI YONO கிளைகள் திறப்பு; இனி வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள் Digital banking: 3 நகரங்களில் SBI YONO கிளைகள் திறப்பு; இனி வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2020/07/01/163080-sbi-yono.jpg)
நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய நகரங்களில் "யோனோ கிளைகளை" (YONO Branch) திறந்துள்ளது. வங்கியின் வாடிக்கையாளர்களிடையே டிஜிட்டல் முறையை (Digital banking) ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். யோனோ (You Only Need One) என்பது எஸ்பிஐயின் டிஜிட்டல் வங்கி பயன்பாடாகும். பி.டி.ஐ (PTI) செய்தியின்படி, பைலட் திட்டத்தின் கீழ் நவி மும்பை, இந்தூர் மற்றும் குருகிராமில் யோனோ கிளைகளை திறந்து வைத்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் கூறுகையில், யோனோ கிளை வாடிக்கையாளர்களை டிஜிட்டல் வங்கி முறைகளை பின்பற்ற ஊக்கமளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த உதவியுடன் அவர்கள் அனைத்து வங்கி சேவைகளையும் எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த வசதிகள் கிடைக்கும்:
தகவல்களின்படி, நீங்கள் மோனோ மற்றும் பிற டிஜிட்டல் (SBI Digital) பயன்பாடு மற்றும் வங்கியின் சேவைகள் தொடர்பான தகவல்களை யோனோ கிளையில் உள்ள வீடியோ சுவரில் பெற முடியும். இது தவிர, கிளை ஊழியர்களிடம் கடன்கள், கிரெடிட் கார்டுகள், காப்பீடு, மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து பேச ஆலோசனை கிடைக்கும்.
அதேநேரத்தில் உங்களுக்கு நினைவுப்படுத்துகிறோம், சில நாட்களுக்கு முன்பு எஸ்பிஐ இன்ஸ்டா சேவிங் வங்கி கணக்கு சேவையைத் தொடங்கியுள்ளது, இதில் வாடிக்கையாளர்கள் யோனோ பயன்பாட்டின் மூலம் உடனடியாக ஆன்லைனில் வங்கி கணக்கு திறக்க முடியும்.
5.1 மில்லியன் பதிவிறக்கங்கள்:
யோனோ பயன்பாடு இங்கிலாந்து, மொரீஷியஸ் மற்றும் நமது நாட்டிலும் தனது சேவையை வழங்கி வருகிறது. யோனோ (YONO Apps) பயன்பாட்டில் இதுவரை 5.1 மில்லியன் பதிவிறக்கங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதில் 24 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர். யோனோ பல இ-காமர்ஸ் நிறுவனங்களுடன் கூட்டாண்மை கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக