செப்டம்பர் 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணம் அமலுக்கு வருவதாக
கூறப்பட்டுள்ளது.
சுங்க கட்டணம்
விலை உயர்வு குறித்து நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு
முழுவதும் பல்வேறு சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண
உயர்வு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இப்போது
திருச்சியில் 8 சுங்கச் சாவடிகளில் 6ல் கட்டணம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு சுங்க கட்டணம் ரூ. 10 - 15 வரை
உயர்த்தப்பட்டுள்ளது. இது ஆண்டுதோறும் செய்யப்படும் வழக்கமான நடைமுறை தான் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக