நோக்கியா
மீடியா ஸ்ட்ரீமிங் சாதனம் இந்தியாவில் பல்வேறு அம்சங்களோடு அறிமுகமாகி
பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது. இந்த சாதனம் ஆகஸ்ட் 28 அன்று ஆன்லைன்
சில்லரை தளங்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை விவரங்கள் குறித்து
பார்க்கலாம்.
நோக்கியா மீடியா
ஸ்ட்ரீமிங் சாதனம்
நோக்கியா
மீடியா ஸ்ட்ரீமிங் சாதனம் இந்தியாவில் அறிமுகமானது. இந்த அறிமுகமானது
பிளிப்கார்ட்டுன் இணைந்து வெளியிடப்பட்டது. இதன் விலை ரூ.3,499-க்கு எனவும் ஆகஸ்ட்
28 முதல் ஆன்லைன் மற்றும் சில்லறை தளங்களில் விற்பனைக்கு வரும் எனவும்
தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ட்ரீமிங்
சாதனம் என்றால் என்ன
நோக்கியா ஸ்ட்ரீமிங் சாதனம் என்றால்
என கேள்வி எழலாம். இந்த சாதனமானது ஆப்பிள் டிவி போல் ஸ்ட்ரீமிங் சாதனம், இந்த
சாதனத்தை டிவியுடன் இணைக்கலாம் இது பல ஓடிடி சேவைகள், மீடியா ஸ்ட்ரீமிங் அணுகல்
உள்ளிட்டவை வழங்கும் இதன்மூலம் ஸ்மார்ட் டிவியாக மாற்றலாம்.
1ஜிபி ரேம்
மற்றும் 8 ஜிபி சேமிப்பு வசதி
நோக்கியா மீடியா ஸ்ட்ரீமர் 1ஜிபி ரேம்
மற்றும் 8 ஜிபி சேமிப்பு வசதி உள்ளிட்டவைகள் வழங்கும். அதோடு இந்த சாதனமானது
குவாட் கோர் செயலி, 450 ஜிபியூ ஆதரவோடு உள்ளது. இந்த ஸ்ட்ரீமர் 9.0 அம்சம் மூலம்
இயக்கப்படுகிறது. 4 GHz / 5 GHz இரட்டை-பேண்ட் வைபை ஆதரவோடு உள்ளது.
1920×1080
பிக்சல் முழு ஹெச்டி
நோக்கியா ஸ்ட்ரீமர் சாதனத்தின்
சிறப்பம்சமானது 1920×1080 பிக்சல் முழு ஹெச்டி தெளிவுத்திறனோடு ஒரு வினாடிக்கு 60
பிரேம்களை வழங்குகிறது. டால்பை டிஜிட்டல் ஆடியோ, க்ரோம்கேஸ்ட் அம்சம் உள்ளிட்ட பல
இயக்க ஆதரவுகளை பெற்றுள்ளது.
ரிமோட்டில் குரல் கட்டுப்பாடு
இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம்
என்னவென்றால் ரிமோட்டில் குரல் கட்டுப்பாடு ஆதரவு கூகுள் அசிஸ்டென்ட் உதவியோடு
வழங்குகிறது. மேலும் நெட்பிளிக்ஸ் மற்றும் ஜீ5 அணுகலை பெறுவதற்கு சிறப்பு
பட்டன்கள் ரிமோட்டில் உள்ளது.
ப்ரீமியம்
அனுபவத்தில் அட்டகாச காட்சி
இஷ்டப்பட்ட திரைப்படங்கள்,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ப்ரீமியம் அனுபவத்தில் அட்டகாச காட்சிகளோடு
பார்க்கலாம். நோக்கியா டிவிகளுக்கான இந்த சாதனம் பிளிப்கார்ட்டில் கிடைக்கும்.
க்ரோம்கேஸ்ட்,
டால்பை டிஜிட்டல்
முழுஹெச்டி திறனோடு நோக்கியா
ஸ்ட்ரீமர் சாதனம் ஆண்ட்ராய்டு ஓஎஸ், க்ரோம்கேஸ்ட், டால்பை டிஜிட்டல், ஜீ5,
நெட்பிளிக்ஸ் ஆதரவும் வழங்குகிறது. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி சேமிப்பு வசதி,
குவாட் கோர் செயலி, ப்ளே ஸ்டோர் பயன்பாட்டு ஆதரவுகள் வழங்குகிறது.
மீடியா
ஸ்ட்ரீமின் விலை ரூ.3499
நோக்கிய மீடியா ஸ்ட்ரீமின் விலை
ரூ.3499 ஆக பிளிப்கார்ட் வழியாக கிடைக்கிறது. சமீபத்தில் எம்ஐ டிவி ஸ்டிக்கின்
விலை ரூ.2,799 ஆகும். இது குரல் உதவியாளர், முழு ஹெச்டி ஸ்டீரமிங் ஆதரவோடு உள்ளது.
இந்த இரண்டு ஸ்ட்ரீமிங் சாதனங்களும் ஓரே விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களை
கொண்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக