Gionee நிறுவனம் தனது சமீபத்திய ஸ்மார்ட்போனை பெரிய பேட்டரி அளவுடன் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. யாரும் நினைத்துப் பார்த்திடாத அளவிற்கு இந்த புதிய ஸ்மார்ட்போனின் பேட்டரியின் அளவு இருக்கிறது. ஜியோனி நிறுவனம் தற்பொழுது இந்த ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த் புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.
Gionee M30 ஸ்மார்ட்போன்
ஜியோனி நிறுவனம் Gionee M30 என்ற பெயரில் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலை 10,000 எம்ஏஎச் பேட்டரி உடன் தனது சொந்த சந்தையான சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் பின் பேனலில் ஒரு ஃபாக்ஸ் லெதர் பூச்சுடன் பின்புற பேனலில் ஒற்றை கேமரா அமைப்பு மற்றும் டிஸ்ப்ளேவின் மேல்-வலது மூலையில் அமைந்துள்ள முன்-கேமராவிற்கான பஞ்ச்-ஹோல் வடிவமைப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
10,000 எம்ஏஎச் பேட்டரி
முதல் முறையாக ஜியோனி நிறுவனம் தனது தயாரிப்பில் இப்படியான ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. உண்மையில் இது ஸ்மார்ட்போனா அல்லது அதிநவீன ஸ்மார்ட் பவர் பேங்க் போன் சாதனமா என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. 10,000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட பவர் பேங்க் போன்று இந்த சாதனம் ஸ்மார்ட்போன் வடிவத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜியோனி M30 விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்
ஜியோனி எம் 30 ஸ்மார்ட்போன், 6.0' இன்ச் கொண்ட 1440 x 720 பிக்சல்கள் உடைய எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மாலி-ஜி 72, எம்பி 3 ஜி.பீ.யுடன் மீடியா டெக் ஹீலியோ பி 60 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த புதிய Gionee M30 ஸ்மார்ட்போன், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் அமைக்கப்பட்ட சேமிப்புடன் வருகிறது
கேமரா
போனின் முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் கொண்ட பின்புற கேமராவுடன் ஒற்றை எல்இடி ப்ளாஷ், முன்பக்கத்திற்கு, செல்பி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 8 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சம் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 10,000 எம்ஏஎச் பேட்டரி ஆகும். மேலும் இதில் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.
விலை என்ன?
இணைப்பு வசதியைப் பொறுத்த வரையில் இதில் இரட்டை 4 ஜி VoLTE, Wi-Fi 802.11 b / g / n, புளூடூத் 4.2, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் இரட்டை சிம் ஆதரவை ஆதரிக்கிறது. ஜியோனி எம் 30 ஸ்மார்ட்போன், 1399 யுவான் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி இது தோராயமாக வெறும் ரூ .15,000 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஸ்மார்ட்போன் கருப்பு வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக