Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

சீன ஸ்மார்ட்போன்களில் இப்படியோரு பிரச்சனையா? உஷார் மக்களே.!


இந்தியாவில் சீன ஸ்மார்ட்போன்கள் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது, குறிப்பாக மலிவு விலையிலும், சிறந்த கேமரா அமைப்பு கொண்ட ஸ்மார்ட்போன்களை சீன நிறுவனம் அதிகளவு உற்பத்தி செய்கிறது. குறிப்பாக சியோமி, ரியல்மி,ரெட்மி போன்ற ஸ்மார்ட்போன்கள் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கின்றன.

இருந்தபோதிலும் சீனாவின் ஹூவாய் போன்கள் மற்றும் சீன செயலிகள் தகவல்களைத் திருகின்றன என்ற குற்றச்சாட்டு நெடு நாள்களாகவே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் ஹூவாய் ஸ்மார்ட்போன்கள் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் வாடிக்கையாளர்களின் தரவுகளையும் பணத்தையும் திருடும் வகையில் மால்வேர்கள் நிறுவப்பட்ட சீன மொபைல்கள் விற்பனைக்கு வந்துள்ளது என்பது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி டிரான்ஷன் ஹோல்டிங்க்ஸ் என்ற சீன நிறுவனத்தின் மொபைல் பிராண்டான டெக்னோW2 என்ற மொபைலில் xHelper, Triada என்ற இரண்டு வகையான மால்வேர்கள்(வைரஸ்கள்) நிறுவப்பட்ட இந்தியா மற்றும் ஆப்பிக்காவில் விற்பனைக்கு விடப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

 டெக்னோ போன்களில் மால்வேர்
இதுகுறித்து ஆய்வு நடத்திய Secure-D என்ற மோசாடிகளை கண்டறியும் நிறுவனம் டெக்னோ போன்களில் மால்வேர் இருப்பதை கண்டறிந்து உறுதிப் படுத்தியுள்ளது. மேலும் மொபைல் பேங்கிங் தகவல்கள், பாஸ்வேர்டு, கட்டண சேவைகள் உள்ளிட்ட தகவல்களை திருடும் வகையில் ரகசியமாக இந்த வகை மால்வேர்கள் மொபைலில் நிறுவப்பட்டுள்ளன.

மேலும் போன்களில் மால்வேர்கள் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ள டிரான்ஷன் நிறுவனம் உதிரி பாங்களை சப்ளை செய்தவர்களின் தவறாக இருக்கலாம் எனவும், மொபைல் போன்களில் மால்வேர்களை நிறுவுவதால் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை என்றும் கூறியுள்ளது.

டெக்னோ மொபைல்களில் உள்ள xHelper, Triadaமால்வேர்கள் அல்காடெல் மொபைல்களில் இருப்பதாகவும் Secure-D கூறியுள்ளது. மேலும் அல்காடெல் மொபைல் போன்கள் பிரேசில், மியான்மர் நாடுகளில் பிரபலமாக விற்கப்பட்டாலும் இந்தியாவில் விற்பனையாவதில்லை என்பது சற்று ஆறுதலான செய்தி.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் டெக்னோ போன்கள் இந்தியாவில் மலிவு விலையில் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம் அன்மையில் ரூ.10,000-க்குள் இரண்டு அல்லது மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக