Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

சோனி எக்ஸ்பிரியா 8 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! அம்சங்கள்.!


சோனி நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது சோனி எக்ஸ்பிரியா 8 லைட் ஸ்மார்ட்போன் மாடலை ஜப்பானிய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோனி எக்ஸ்பிரியா 8 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 6.0-இன்ச் முழு எச்டி பிளஸ் Triluminous எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2560 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 21:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.
 

சோனி எக்ஸ்பிரியா 8 லைட் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

சோனி எக்ஸ்பிரியா 8 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ்+ 8எம்பி செகன்டர லென்ஸ் என மொத்த இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்ககை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
 

சோனி எக்ஸ்பிரியா 8 லைட் ஸ்மார்ட்போனில் 2870எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இதன் ஆடியோ பகுதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
 

4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி (2.4 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 5 ஜிகாஹெர்ட்ஸ்), புளூடூத் 5 எல்இ, ஜிபிஎஸ், க்ளோனாஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!