இப்போது அனைத்து பொருட்களிலும் ஸ்மார்ட் அம்சம் வந்துவிட்டது என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக சிலருக்கு கிட்டப்பார்வை,தூரப்பார்வை என கண் பிரச்சனைகள் இருக்கும், இதற்கு ஏற்ப மூக்குக் கண்ணாடி அணிவார்கள். ஆனால் இப்போது சிலர் பார்வை பிரச்னை இல்லை என்றாலும் கூட ஸ்டைலுக்காகவே நிறைய மூக்குக் கண்ணாடிகள் உள்ளன.
இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும்
இதுதவிர இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும், கணினி பயன்படுத்துவர்களுக்கும் என கண்ணை பாதுகாக்க பலவகை கண்ணாடிகள் உள்ளன. இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று மூக்கு கண்ணாடியை ஸ்மார்ட் மூக்கு கண்ணாடியாக உருவாக்கியுள்ளது.
இந்த அட்டகாசமான ஸ்மார்ட் கண்ணாடியின் ஓரத்தில் குறைந்த ஒலி அளவு கொண்ட ஸ்பீக்கர்கள் உள்ளன, எனவே இதன் மூலம் பாடல்களை கேட்டகலாம், அதேபோன்று செல்போன் அழைப்புகளையும் கண்ணாடி மூலமே பேசிக்கொள்ளலாம்.
இப்போதான் தெரியுது ஏன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை செய்ய ஆசைப்படுறாங்க? தரமான காரணங்கள்.!
ஸ்மார்ட் கிளாஸ் என்றாலும் கூட பார்வைக்கு
மேலும் இது ஸ்மார்ட் கிளாஸ் என்றாலும் கூட பார்வைக்கு இந்த வகை கண்ணாடிகள் சாதாரண மூக்குக் கண்ணாடிகளாகவே இருக்கின்றன,எனவே இதனால் எப்போதும் போல பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.
ஒரு கிளிக் மூலம் கண்டுபிடித்துக் கொள்ளலாம் என கண்ணாடி
அதேபோன்று கண்ணாடியை எங்கேனும் மறந்து வைத்தாலும் ஒரு கிளிக் மூலம் கண்டுபிடித்துக் கொள்ளலாம் என கண்ணாடியை உருவாக்கிய நிறுவனம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற ஸ்மார்ட் மூக்கு கண்ணாடிகள் வெளிவந்தால் சார்ஜிங் அம்சத்துடன் வெளிவரும் என்றுதான் கூறவேண்டும். அதன்படி சிறந்த பேட்டரி வசதி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப ஆதரவுகளை அடிப்படையாக கொண்டு இந்த சாதனங்கள் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கால் அழைப்பு நன்மைகள்
அதேசமயம் கால் அழைப்பு நன்மைகள், இசை உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டு இந்த சாதனங்கள் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாகவும் இருக்கும். பின்பு இது விற்பனைக்கு வரும்போது விலை உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக