வல்லரசு நாடான அமெரிக்காவின் மிகவும் பழமையான டிபார்ட்மென்டல் ஸ்டோர் நிறுவனமான Lord & Taylor என்ற தொடர்ச் சங்கிலி நிறுவனம் கொரோனா-வால் வாடிக்கையாளர்களையும், வர்த்தகத்தையும் இழந்து தற்போது மொத்தமாக மூடப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் நிறுவனம் திவால் ஆகிவிட்டதாகவும் அறிவித்துள்ளது Lord & Taylor நிறுவனம்.
அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி வரும் வேலையில், அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக வேலைவாய்ப்பு சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக ஏற்கனவே குறைவான வர்த்தகத்தால் தவித்து வந்த பல அமெரிக்க நிறுவனங்கள் இந்தக் கொரோனா காலத்தில் திவாலாகியுள்ளது. அதில் Lord & Taylor நிறுவனம் ஒன்றாகும்.
திவால்
மேசமான வர்த்தகத்தால் தவித்து வந்த Lord & Taylor கடந்த வருடம் தான் Le Tote என்னும் நிறுவனத்திற்குச் சுமார் 100 மில்லியன் டாலர் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது, இது கனடாவின் முன்னணி ஹட்சன் பே நிறுவனத்தின் கிளை நிறுவனமாகும். Le Tote நிறுவனம் ஒரு ஆன்லைன் ஆடை வாடகை நிறுவனமாகும்.
கொரோனாவால் Lord & Taylor நிறுவனத்தின் மொத்த வர்த்தகமும் பாதிக்கப்பட்ட நிலையில், இந்நிறுவனத்தின் 38 கடைகளும் மூடப்பட்டு அன்லைன் ஆப்லைன் வர்த்தகம் மற்றும் இணையதளத்தை மொத்த மூடி திவாலானதாக அறிவித்துள்ளது.
1826ஆம் ஆண்டு
Lord & Taylor நிறுவனம் 1826ஆம் ஆண்டு துவங்கப்பட்டு அமெரிக்காவின் முக்கியமான பகுதிகளில் டிப்பார்மென்ட் ஸ்டேர்ஸ் வைத்து நீண்ட காலமாக வர்த்தகம் செய்து வந்தது. ஆனால் கடந்த 20 முதல் 30 வருடத்தில் பல முன்னணி பிராண்ட் நிறுவனங்கள் இத்துறையில் சிறந்து விளங்கும் காரணத்தாலும், ஆன்லைன் ஷாப்பிங் பெரிய அளவில் மக்களை ஆட்கொண்ட காரணத்தாலும் இந்நிறுவனத்தின் வர்த்தகம் படிப்படியாகக் குறைந்தது.
கொரோனா
இப்படி முன்னணி கடைகள் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தால் பாதிக்கப்பட்ட Lord & Taylor நிறுவனம் கொரோனா-வால் தன்னிடம் இருந்து சிறிய அளவிலான வர்த்தகத்தையும் இழந்து மொத்தமாகத் தனது விற்பனை மற்றும் சேவைகளை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் சந்தையில் நிறுத்திவிட்டு திவால் ஆனதாக அறிவித்துவிட்டது. இந்தக் கொரோனா காலத்தில் அமெரிக்காவில் ஆன்லைன் ஷாப்பிங் செய்வோர் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
ஆடை
இந்தக் கொரோனா காலத்தில் அமெரிக்காவில் பல ஆடை நிறுவனங்கள் திவாலானது அதில் முக்கியமாக Brooks Brothers, Neiman Marcus மற்றும் J C Penney. ஆனால் Lord & Taylor கொரோனாவுக்கு முன்பு இருந்தே மோசமான வர்த்தகத்தில் தான் இருந்தது. ஆனால் இக்காலகட்டத்தில் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது.